உள்ளூர் செய்திகள்

குறிக்கோளுடன் வாழுங்கள்

* மனிதன் வெறும் உணவை மட்டும் தேடிக் கொண்டிருக்கக்கூடாது. கடவுளை அறிவதற்காக பிறந்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.* மனிதனுக்கு இருகண்கள் இருந்தும் கூட 'எல்லாம் நானே' என்ற அகங்காரம் கொண்டு பார்வையற்றவனாக வாழ்கிறான்.* எதைச் செய்தாலும் மனச்சாட்சியிடம் கேட்டு செயல்படுங்கள். உங்களுக்கு தக்க எஜமானாகவும், வழிகாட்டியாகவும் இருப்பது அதுவே. * பிரார்த்தனை உதட்டிலிருந்து எழும் வெறும் வார்த்தைகளாக இருக்கக்கூடாது. மனதின் அடி ஆழத்தில் இருந்து எழுவதாக இருக்கவேண்டும். அதுதான் இறைவனின் அருளைப் பெற்றுத்தரும்.* வேகமாகப் போவதை விட விவேகமாகச் செல்வதே நல்லது. அப்போது தான் போய்ச் சேரும் இடத்திற்குச் சரியாக சென்று சேர முடியும்.* குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, நேர்மை இல்லாத வருமானம், ஒழுக்கம் இல்லாத கல்வி, தூய்மை இல்லாத பக்தி இவை அனைத்தும் பயன் சிறிதும் விளைவதில்லை.- சாய்பாபா