உள்ளூர் செய்திகள்

பெண்களை மதிப்போம்

*சக்தியின் வடிவமாகத் திகழும் பெண்களை மதித்து வாழ்ந்தால் உலகமே ஆனந்தமாக இருக்கும்.*ஐம்புலன்களுக்கு அடிமையாவது நல்லதல்ல. அவற்றை ஆட்சி செய்யும் நிலைக்கு மனிதன் உயர வேண்டும்.* பேராசை கொண்டவன் எதிலும் திருப்தி அடைய மாட்டான். திருப்தியே மேலான செல்வம்.* பிறவி என்னும் நீண்ட பயணத்தில் உடல் என்பது தற்காலிகமாகத் தங்கும் விடுதியாகும்.* கடவுளையும், மனிதனையும் இணைக்கும் பாலமே வழிபாடு. வழிபாட்டால் மனம் துாய்மை பெறுகிறது.-சாய்பாபா