அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்
* சத்ய ரூபமாகவும், அன்பு வடிவமாகவும் கொண்ட இறைவனை அடைய விரும்பும் பக்தர்கள் உண்மையுடன் நடந்து, அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்.* பகவானை உணர, நாம் சிரமப்பட வேண்டியதில்லை. அவர் எங்கும் இருக்கிறார், எல்லோரிடமும் இருக்கிறார். அனைவரிடத்திலும் இறைவனைப் பாருங்கள். அனைவரையும் நேசியுங்கள். அதுவே இறைவனுக்குப் பிரியமான பக்தி மார்க்கம்.* பூரணமான உறுதியான நம்பிக்கையுடன் இறைவனை நாட வேண்டும். இதயப்பூர்வமாக உணர்ந்து பாடுவதன் மூலம் அவரை அணுக வேண்டும். இதய சுத்தத்துடன் ஹரியின் நாமத்தைப் பூஜிக்க வேண்டும். * மாணவமணிகள் நல்லவர்களாக இருந்தால் போதாது, அவர்களுடைய நண்பர்கள், தோழியர் ஆகியோரிடம் நற்பண்புகளை உருவாக்க வேண்டும். * பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் நமக்குள்ளேயே இருக்கின்றனர். அவர்களை நாம் வெளியே தேட வேண்டியதில்லை. ஆன்மிக உணர்வை பெற்றால் மனிதன் இறையருளால் அபூர்வ சக்தியைப் பெறுகிறான். இதன்மூலம் தெய்வீக அருளையும், மனித நேயத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். -சாய்பாபா