நாக்கிடம் பாடம் படியுங்க!
UPDATED : டிச 23, 2011 | ADDED : டிச 23, 2011
* பஜனை என்னும் கயிறால், எல்லாம் வல்ல இறைவனை நீங்கள் கட்டி இழுத்து உங்கள் அருகே வரச் செய்யலாம்.* நாக்கிடம் பாடம் படியுங்கள். சுவையுள்ள நல்ல பொருளாக இருந்தால், அது தொண்டைக்குள் அதைத் தள்ளுகிறது. கெட்டுப்போன தீயதாக இருந்தால் உடனே வெளியே துப்பி விடச் செய்கிறது. நல்லதை எடுத்துக் கொள்ளவும், தீயதை வெளித்தள்ளவும் நாக்கிடம் பழகுங்கள்.* பெயரளவுக்கு நேரம் ஒதுக்கி பக்தியில் மூழ்கினால் போதாது. வாழ்வு முழுவதும் இறைவன் சந்நிதியில் வாழ்ந்து கழிக்க வேண்டும்.* இறைவன் மிக கருணையானவன். அவனை பக்தியோடு அழைத்தால் உங்களை வழி நடத்த வருவான்.* இறைவன் மீது, பிரிக்க முடியாத மற்றும் ஆசையில்லாத மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* மனதை குளிர்ச்சியாகவும், சுகமான நிலையிலும் வைத்துக் கொள்ள பக்தியே சிறந்த வழி. - சாய்பாபா