அழைத்தால் வரும் ஆண்டவன்
UPDATED : நவ 11, 2012 | ADDED : நவ 11, 2012
* கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்காக ஏங்குவதை விட கண்ணெதிரே வாழும் தெய்வீகமான தாயை வணங்குங்கள். தாயின் அன்பு கிடைத்தால், இறையருள் பூரணமாகக் கிடைக்கும்* உண்மையான பக்தியும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால் கடவுளை விரைவில் காணும் பாக்கியம் கிடைக்கும்.* வாழ்வில் எத்தகைய பிரச்னை நேர்ந்தாலும் கவலை வேண்டாம். கடவுளின் பொறுப்பில் உங்களை முழுமையாக ஒப்படையுங்கள். * தொடக்கத்தில் யாராலும் பற்றற்ற நிலையில் சேவை செய்ய முடியாது. ஆனால், நாளடைவில் தன்னலமற்ற சேவையாற்றும் மனப்பான்மை படிப்படியாக உருவாகும். அதைவிட மேலான மகிழ்ச்சி உலகில் வேறில்லை. * குட்டிப்பூனையின் மென்மையான ஒலி கேட்டு ஓடிவரும் தாய்ப்பூனை போல, பக்தனின் இதயத்தில் இருந்து எழும் குரலைக் கேட்ட மாத்திரத்தில் கடவுள் ஓடி வந்து விடுவார்.- சாய்பாபா