உள்ளூர் செய்திகள்

யோசித்து செயல்படுங்கள்

* மனதில் எழும் ஆசை நியாயமானதா என்று யோசித்து செயல்படுங்கள்.* பொருள் இல்லாதவனை ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.* துன்பத்திற்குக் காரணமான தீய ஆசை ஒழிந்தால், வாழ்வு பலாச்சுளையாக இனிக்கும்.* ஆடு, மாடுகள் கடித்து விடாதபடி செடிக்கு வேலியிடுவது போல, மனதிற்கு வைராக்கியம் என்னும் வேலி இட்டால் தீங்கு உண்டாகாது.* ஆசை என்னும் கை விலங்கை அறுத்து எறிந்தால், மனிதன் சுதந்திரப் பறவை போல வாழலாம்.- சாய்பாபா