உள்ளூர் செய்திகள்

யோசித்துப் பேசுங்கள்!

* ஆன்மிக இயல்பு கொண்டவனாக மனிதன் இருக்கவேண்டும். அவன் செல்லும் இடத்தில் எல்லாம் தெய்வீக மணம் கமழும் விதத்தில் செயல்பட வேண்டும்.* உயிர்களின் நலனுக்காக கடவுள் உலகினை படைத்தார். ஆனால், மனிதனோ தன் முனைப்பு காரணமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.* செயலைப் பொறுத்து தான் விளைவு உண்டாகிறது. ஆனால், மனிதன் நல்லதை தீயதாகவும், தீமையை நல்லதாகவும் கற்பனை செய்து கொள்கிறான்.* அடுத்தவர்க்கு தீங்கு நினைப்பது கூடாது. பொன், பொருள், கவுரவம், பட்டம், பதவி என்று சுயநலத்துடன் அலைவது கூடாது. * சேருமிடம் வந்து விட்டால் பயணத்தை முடித்துக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கிவிடுவோம். அதுபோல, வாழ்வின் எல்லையான ஆயுள் முடிந்து விட்டால் உடல்விட்டு உயிர் நீங்கி விடுகிறது. * சிந்தனை அனைத்திற்கும் சொல்வடிவம் கொடுத்து விடாதீர்கள். சொற்களைத் தேர்ந்தெடுத்து யோசித்துப் பேசுங்கள்.- சாய்பாபா