இறைவனின் திருவடி தரிசனம்
* நல்ல எண்ணம் கொண்ட உள்ளத்தை பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். புண்ணிய செயல்களால் அது புனிதமும் இனிமையும் பெற வேண்டும்.* அனைத்து உயிர்களையும் இறைவனின் குழந்தைகளாக நினைக்க வேண்டும். வெறுப்புணர்வை தவிர்த்து எவருக்கும் தீங்கு இழைக்காத நல்லுணர்வை வளர்க்க வேண்டும்.* வாழ்க்கையை சத்தியசோதனையாக எடுத்து கொண்டு, எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் கடைபிடியுங்கள். அமைதியும், செல்வமும் உங்களை வந்தடையும்.* நம்மை சீர்படுத்த எண்ணினால், கோபம் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அடக்க உணர்வு தெய்வீகத்தை தர வல்லது.* இறைவனின் பாதம் தர்மத்தையும், கைகள் மோட்சத்தையும், முகம் இறைவடிவத்தையும் காட்டுகிறது. இவற்றுள் இறைவனின் பாதமே மிக உயர்ந்தது. எனவே தான், இறைவனின் திருவடிகளைப் பூஜிக்கச் சொல்கிறார்கள் பெரியோர்.* 'நான்' என்ற ஆணவத்தை விடுவதுடன், சர்வமும் இறைவன் கொடுத்தது, எதுவும் தனக்கு உரியதல்ல என்று எண்ணி, ஆசைகளை துறந்தால் இறைவனை எளிதாக நெருங்கலாம்.- சாய்பாபா