வங்கி சேமிப்பு இதுவே!
                              UPDATED : மே 19, 2014 | ADDED : மே 19, 2014 
                            
                          
* அன்பில்லாத இதயம் வறண்ட பாலைநிலத்திற்குச் சமம். அன்பு ஒன்றால் மட்டுமே இந்த அகிலம் செழித்திடும்.* யாரையும் தவறாக எண்ண வேண்டாம். அவர்களிடம் இருக்கும் நல்ல பண்பை மட்டும் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.* இதய வங்கியில் அன்பைச் சேமியுங்கள். அதை எந்த திருடனாலும் களவாட முடியாது* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று நேர்கோட்டில் அமைவது தான் உயர்ந்த வாழ்க்கை.* கல்விக்கு அடிப்படை ஒழுக்கம். ஒழுக்கமில்லாத கல்வியால் யாருக்கும் பயனேதும் உண்டாகாது. - சாய்பாபா