நேரம் நல்ல நேரம்
* குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு பகுதியே. ஆன்மிகம், ஒழுக்கம், பண்பாடு போன்ற நற்பண்புகள் குடும்பத்தில் இருந்தால் சமூகத்திலும் பிரதிபலிக்கும்.* எந்த விஷயத்திலும் மாறுபாடான சிந்தனை இருப்பதை தவிர்க்க முடியாது. அதுபோல, கடவுள் விஷயத்திலும் நாத்திகம் பேசும் மனிதர்கள் இருக்கின்றனர்.* அழுக்குத் துணிகளை நல்ல துணிகளோடு சேர்த்து வைப்பதில்லை. அதுபோல, தீயவர்களோடு நல்லவர்கள் சேர விரும்புவதில்லை.* நாவை அடக்கப் பழகினால் ஞானியாகலாம். எளிய உணவு, அளவான பேச்சு இரண்டையும் கடைபிடித்தால் எல்லா நலங்களும் கைகூடும். * அன்பு, அமைதி, உண்மை, சேவை இவையே தியானத்தின் அடையாளங்கள். பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் வெளிப்படுத்துங்கள்.* காலத்திற்கு மனிதன் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நேர ஒழுங்கு மிகவும் முக்கியம். குறித்தநேரத்தில் குறித்த வேலையைச் செய்து முடியுங்கள். ஒவ்வொரு விநாடியும் நல்ல நேரமாகட்டும். - சாய்பாபா