உள்ளூர் செய்திகள்

பெற்றோரை வணங்குங்கள்

* உண்மையும், பொய்யும் உலகில் கலந்தே இருக்கிறது. சிக்கலான இந்த கலவையை பகுத்து ஆய்ந்து உண்மையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.* மனிதன் சிந்திக்கும் திறன் படைத்தவன். அதனால் எதையும் அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும்.* தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால் மட்டுமே வாழ்வில் தன்னிறைவு பெற முடியும். அதன்பின், தன்னலத்தை தியாகம் செய்து சேவை செய்ய முற்படுங்கள்.* மனிதப்பிறவி கடவுளின் அரிய வெகுமதி. இதை முழுமையாகப் பயன்படுத்தாத ஒவ்வொருவரும் பெரும் பாவம் செய்தவர் ஆவர்.* பெற்றோரைக் கடவுளுக்குச் சமமாக வணங்குங்கள். பண்பாட்டின் அங்கமாக பெற்றோர் இருக்கின்றனர்.* வாழ்வை மலரைப் போல நேசியுங்கள். அதிலிருந்து நறுமணம் என்ற மவுனமொழியைப் பரப்புங்கள்.* கண்ணை இமை காப்பது போல கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்பதை உறுதியாக நம்புங்கள். இதில் இம்மியளவும் சந்தேகம் கூடாது.- சாய்பாபா