உள்ளூர் செய்திகள்

நல்லதே நடக்கும்!

* உலகில் நீ ஒரு வழிப்போக்கன் என்பதை மறந்து விடாதே. எப்போதும் இது ஞாபகத்தில் இருக்கட்டும்.* பிறர் உன்னை இம்சிக்கும் போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது.* கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அவர் அன்பு மிக்க பெற்றோரைப் போன்றவர்.* சத்தியம் எங்கு இருக்கிறதோ, அங்கு எல்லா நற்குணங்களும் தானாகவே வந்து சேரும்.* நல்லதையே பார்க்கவும், கேட்கவும், சிந்திக்கவும் செய். எல்லா நன்மைகளும் வாழ்வில் பெறுவாய்.- சிவானந்தர்