உள்ளூர் செய்திகள்

உண்மையான மதிப்பு

அரண்மனைத்தோட்டத்தில் மாலை நேரத்தில் மன்னரும் முல்லாவும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது முல்லா அவர்களே ''தாங்கள் ஒருவரை பார்த்த மாத்திரத்திலேயே அவருடைய மதிப்பை கூறிவிடுவீர்களாமே என கேள்விப்பட்டேன்'' என்றார் மன்னர். ஆமாம் எனக்கு இந்த ஆற்றல் இறைவன் அருளால் கிடைத்தது என்று பதில் கூறினார். அப்படியானால் என்னுடைய மதிப்பு என்ன வென்று கூறுங்கள் பார்க்கலாம் என்றார். தங்களுடைய உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள் தான் எனச்சொன்னார் முல்லா. தங்களை என் மதிப்பு பற்றி கேட்டால் என் இடுப்பில் அணிந்திருக்கும் பட்டுத்துணியின் மதிப்பைப் பற்றி கூறுகிறீர்கள் என கோபமாக கேட்டார் மன்னர். நான் சொன்னது தங்களது பட்டுத்துணியின் மதிப்பைப் பற்றித்தான்.உடலிருந்து உயிர் பிரிந்து விட்டால் இன்று உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து நீடிக்காது. அழியக்கூடிய உடம்புக்கு மதிப்பு இருக்காது என்றார். முல்லாவின் அந்தச் சாதுரியமான பதில் மன்னரை சிந்திக்க வைத்தது. காவலாளி இரவு உணவுக்கு அழைக்க இருவரும் சென்றனர்.