மணமகளின் ஆசை
UPDATED : அக் 25, 2024 | ADDED : அக் 25, 2024
திருமணத்தை உறுதிப்படுத்தும் முன் மணமகன் பெண்ணைப் பார்ப்பது போல், பெண்ணும் மணமகனை பார்க்க வேண்டும். தன் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறியும் உரிமை பெண்ணுக்கு உண்டு. பெண்ணின் அழகைப் பற்றி ஆணுக்கு சுதந்திரம் இருப்பது போல பெண்ணுக்கும் சுதந்திரம் தரப்பட வேண்டும். ஒருவேளை பெண்கள் நாணத்தால் ஆணைப் பார்க்க விரும்பாமல் இருக்கலாம். ஆனாலும் மணமகனின் வயது, உடல்நலம், கல்வி குறித்த அம்சங்களை மறைத்து விடக் கூடாது.