உள்ளூர் செய்திகள்

பொய் சொல்லாதே

பணத்தாசை பிடித்தவர் வியாபாரி முபாரக். வெளியில் செல்லும் போது அவரது பணப்பையை தொலைத்தார். அந்த வழியாகச் செல்வோரிடம், 'என் பணப்பையை கண்டுபிடிப்பவருக்கு பரிசு' என்றார். புதர் ஒன்றில் கிடந்த பணப்பையை எடுத்துக் கொடுத்தார் பாட்டியுடன் அவ்வழியே வந்த சாதிக். அதை வாங்கிய முபாரக், 'மோதிரம் ஒன்று இதில் இருந்தது. அதைக் காணவில்லையே' எனப் பொய் சொன்னார். இதைக் கேட்ட சாதிக் அதிர்ச்சியானார். உடனே அவரது பாட்டி, ''இந்தப்பை இவருடையது இல்லை... அதனால் போலீசில் ஒப்படைப்போம்' என்றாள் கோபமாக. அந்தர்பல்டி அடித்தார் வியாபாரி. பொய் சொன்னதற்காக அவர்களிடம் மன்னிப்பும் கேட்டார்.