என்ன செய்தீர்கள்
UPDATED : மே 01, 2025 | ADDED : மே 01, 2025
நபிகள் நாயகத்தை சந்தித்த ஒரு நபர், ''எனக்கு நுண்ணிய அறிவை கற்றுக் கொடுங்கள்'' எனக் கேட்டார். ''அடிப்படையான அறிவை வைத்துக் கொண்டு இத்தனை நாளும் என்ன செய்தீர்கள்'' ''கேட்பது புரியவில்லையே'' ''உம்மை படைத்த ஒருவன் இருக்கிறான் என்பது தெரியுமா'' ''தெரியும்'' ''இறைவனுக்காக என்ன செய்தீர்கள்'' பதில் சொல்லாமல் அந்த நபர் தலைகுனிந்தார்.''மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்பது தெரியுமா'' எனக் கேட்டார் நாயகம். ''தெரியும்''''மறுமைக்கு பயன் தரும் நல்ல விஷயங்களில் ஈடுபட்டீர்களா'' இதற்கும் அவரிடம் பதில் இல்லை. ''அதை முதலில் செய்யுங்கள். பிறகு நுண்ணிய அறிவு பற்றி தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.