மனம் தளராதே
அறிஞரிடம் ''வாழ்க்கையின் மதிப்பு தெரியாத என்னை ஏன் இறைவன் படைத்தார்'' என கேட்டார் ஒரு இளைஞர். அதற்கு அவரிடம் ஒரு சாதாரண சிவப்புக்கல் ஒன்றைக் கொடுத்து இதை யாரிடமும் விற்கக்கூடாது. ஆனால் இதன் உண்மையான மதிப்பினை தெரிந்து கொண்டு வா! என்றார். அதன் மதிப்பினை அறிய அவர் வியாபாரிகளிடம் சென்றார். ஒவ்வொருவரும் விதவிதமான பதிலைச் சொன்னார்கள். மனம் தளராத அவர் நகை செய்து தரும் ஒருவரிடம் சென்றார். அவரோ! அதை பரிசோதித்துவிட்டு, ஒரு கோடி ரூபாய் பெறும். இதை நானே வாங்கிக் கொள்கிறேன் என்றார். அவருக்கோ குழப்பம். அறிஞரிடம் நடந்ததை சொன்னார். அதற்கு அவரோ பார்த்தாயா! ஒவ்வொருவரும் அவரவருக்கு தகுந்த மாதிரி அதன் மதிப்பினைச் சொன்னார்கள். கடைசியாகத் தான் உண்மையான மதிப்பினை தெரிந்து கொண்டாய். அதைப்போல் உன்னையும் மதித்து நடத்திட ஒருவர் எங்கோ இருக்கிறார். அவரை தேடிச்செல் உன்மதிப்பு உனக்கு தெரியும் என கூறினார் அறிஞர்.