புத்திசாலியிடம் பொய் சொல்லாதே!
UPDATED : டிச 14, 2022 | ADDED : டிச 14, 2022
மரத்தின் மீது அமர்ந்திருந்த சேவலை பார்த்த நரிக்கு அதனை சாப்பிட ஆசை. அதற்காக தந்திரம் செய்த நரி அதனிடம் ''பறவை, மிருகங்களுக்குள் இனி சண்டை கிடையாது'' என ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அது பற்றி உன்னிடம் விரிவாக பேச வேண்டும் அருகில் வா என்றது. அதற்கு சேவலோ ''தொலைவில்... வேட்டை நாய்கள் கூட்டம் வருகிற மாதிரி தெரிகிறது. அவர்களையும் அழைத்துக் கொள்வோமா'' எனக் கேட்டது. அதைக் கேட்ட நரி திரும்பி பார்க்காமல் புறப்பட்டது. சேவல் நரியண்ணா ஏன் செல்கிறீர்கள் எனக்கேட்க... தற்போது தான் காட்டு ராஜாவிடம் இருந்து அறிவிப்பு வெளியானது. அதனால் இந்த விஷயம் வேட்டை நாய்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனதுயிர் எனக்கு முக்கியம் என்று சொல்லிக் கொண்டே காட்டிற்குள் ஓடியது நரி.