உள்ளூர் செய்திகள்

உணர்ச்சி வசப்படாதீர்

கொக்கு ஒன்று குளத்திலுள்ள மீன், நண்டு இவைகளை எப்படி உணவாக்கலாம் என யோசித்தது. அப்போது அதன் அருகே வந்த சில மீன்கள் என்ன கொக்காரே பலமான யோசனை என கேட்டது. இன்னும் ஒரிரு நாட்களில் இங்குள்ள தண்ணீர் வற்றிவிடும். ஆதலால் அருகில் உள்ள குளத்திற்கு சென்றால் தான் உயிர் வாழ முடியும் என சொன்னது. உடனே அங்குள்ள மீன்கள் எங்களையும் கொண்டு அக்குளத்தில் விடும் என கேட்டுக் கொண்டது. அதன்படியே செய்ய இதை கவனித்த நண்டு என்னையும் அங்கு கொண்டு சேரும் என வேண்டியது. நண்டினை வாயில் பற்றிக் கொண்டு வானத்தில் பறந்தது கொக்கு. அங்கிருந்து கீழே பார்த்த நண்டிற்கு மீன்களின் எலும்புகள் பாறையின் மேல் கிடப்பதை பார்த்து நடந்தது என்ன என்பதை உறுதி செய்தது. கொக்கிடம் எனது சொந்தங்களிடம் வேறு இடத்திற்கு செல்வதை கூற மறந்து விட்டேன் என சொன்னது. மீண்டும் அக்குளத்திற்கே வந்த கொக்கினை தனது கொடுக்குகளால் வெட்டி விட்டு தண்ணீருக்குள் விழுந்தது. குளத்தில் மீதியிருந்த மீன்களும், நண்டுகளும் தப்பின.