உள்ளூர் செய்திகள்

நற்பண்பே நல்லது

வேலை தேடி அலைந்த இளைஞருக்கு ஒரு நிறுவன அதிகாரி வேலை கொடுக்க முன் வந்தார். அவரிடம் இருந்த நல்ல பண்புகளை அறிந்து தன் மகளை திருமணம் செய்து கொள்ள சம்மதமா எனக் கேட்டார். அவரும் சம்மதம் சொல்ல 'அவளுக்கு சில குறைபாடு உள்ளது' என்றார் அதிகாரி. அதைக் கேட்ட இளைஞர் அதிர்ந்து போனார். 'என் மகளை திருமணம் செய்தால் தான் உனக்கு வேலை உறுதி' என்றார். வீட்டிற்கு வந்த இளைஞர் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார். இந்நிைலயில் திருமணத்திற்கு ஏற்பாடானது. மணமேடையில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. மணப்பெண்ணிற்கு எந்த குறைபாடும் இல்லை. பின்னர் ஏன் உன் அப்பா அப்படிச் சொன்னார் எனக் கேட்டார் இளைஞர். அதற்கு அப்பெண்ணோ ''ஆம். தீயவிஷயங்களை பார்க்க மாட்டேன், பேசமாட்டேன், கேட்கமாட்டேன் அதனால் தான் அப்பா அவ்வாறு சொன்னார்'' என்றாள். திருமணமும் நன்றாய் நடந்தன.