உள்ளூர் செய்திகள்

நல்லவன் வாழ்வான்

''திருடுதல், மது அருந்துதல் போன்ற தீயச்செயலில் இருந்து மீள என்ன வழி'' என ஒருவர் நாயகத்திடம் கேட்டார். அதற்கு இன்று முதல் யாரிடமும் பொய் சொல்லக் கூடாது என உறுதி எடுத்துக் கொள் என்றார். அன்றிரவு திருடச் சென்ற அவனுக்கு அவரின் நல்ல வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. மறுநாள் அவரைப் பார்த்தால் பொய் சொல்ல வேண்டியது வருமே என நினைத்தபடியே அதனைக் கைவிட்டான். நாளடைவில் அவனிடமிருந்த தீயசெயல்கள் ஒழிந்தன. நல்லவனாக வாழத்தொடங்கினான்.