உள்ளூர் செய்திகள்

ஒற்றுமையே பலம்

சகோதரர்கள் நான்கு பேருக்கு பல நாட்களாக மனக்கசப்பு இருந்தது. இதை அறிந்த தந்தை இவர்களை எப்படி திருத்துவது என யோசனை செய்தார். ஒருநாள் அவர்களுடைய கைகளை மடக்க விடாமல் அடிக்குச்சி வைத்து கட்டி ஒரே அறையில் அடைத்தார். அவர்கள் முன்பு மதிய உணவு இருந்தும் அவர்களால் சாப்பிட முடியவில்லை. மாலையில் அறையை திறந்த தந்தை அவர்களை பார்த்து ''சாப்பிட்டீர்களா'' எனக்கேட்டார். ''நீங்கள் தான் கைகளை கட்டி விட்டீர்களே பிறகு எப்படி சாப்பிடுவது'' என பசியோடு பதில் சொன்னார்கள். அதற்கு அவரோ ''எதிர் எதிர் திசையில் இருந்து ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டி விட்டு உங்கள் பசியை போக்கி இருக்கலாமே'' என அறிவுரை கூறினார். ஒற்றுமையின் தன்மையை உணர்ந்த அவர்கள் நன்றியோடு தந்தைக்கு வணக்கம் செலுத்தினர்.