| ADDED : ஆக 07, 2024 09:58 PM
கோவை, காந்திபுரம் பகுதியில், 167.25 கோடி ரூபாய் செலவில், செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ஆய்வு செய்து, பூங்காவில் அமைய உள்ள அரங்குகள், 'பார்க்கிங்' மற்றும் கட்டடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பூங்காவில் அமைய உள்ள அரங்கு பணிகள் குறித்து கேட்ட பின், 'இதில், தியேட்டர், மால் போன்ற அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும். அதில், நமக்கும் வருமானம் வரணும்' என்று, மாநகராட்சி கமிஷனரான சிவகுருபிரபாகரனிடம் தெரிவித்தார். இதை கேட்ட மாநகராட்சி ஊழியர் ஒருவர், 'யாருக்கு வருமானம் வரணும் என்கிறார் அமைச்சர்... நமக்கு என்றால், அரசியல்வாதிகளுக்கா இல்லை அரசுக்கா?' என மெதுவாக முணுமுணுக்க, அருகில் இருந்த கட்சி தொண்டர், அவரை முறைத்தபடியே, 'அரசுக்கு வருமானம் வரட்டும்னு தான் அமைச்சர் சொல்றாரு...' எனக் கூற, ஊழியர் சத்தமின்றி நழுவினார்.-***