உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்: தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்: தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்நீண்ட நேர வானவில்மழையின்போது வானவில் தோற்றுவது அழகான இயற்கை நிகழ்வு. இது பிற்பகலில் பெய்யும் மழைக்குப் பின் தோன்றும். மழை மட்டும் காரணம் அல்ல. பனிமூட்டம், காற்றில் மிதக்கும் சிற்சில துாசுகள், நீர்த்துளிகள், சூரிய ஒளியும் வானவில் தோன்ற முக்கிய பங்காற்றுகின்றன. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்களில் தெரியும். 2017 நவ. 30ல் சீன தைபேயில் 8 மணி நேரம், 58 நிமிடம் வானவில் தெரிந்தது. இதுதான் உலகில் நீண்டநேரம் தெரிந்த வானவில் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.தகவல் சுரங்கம்உயரமான வளைவுஅமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் லுாயிஸ் நகரில் 'கேட்வே ஆர்ச்' தேசியப்பூங்கா உள்ளது. இவ்வளாகத்தில் உலகின் உயரமான வளைவு (ஆர்ச்) உள்ளது. இதன் பெயர் 'கேட்வே ஆர்ச்'. இதன் உயரம், அகலம் 630 அடி. இது துருப்பிடிக்காத இரும்பினால் அமைக்கப்பட்டது. மிசிசிபி ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. 1947ல் இதை வடிவமைத்தவர் அமெரிக்காவின் இரோ சாரினன். இதன் கட்டுமானப்பணி 1963ல் தொடங்கி 1965ல் நிறைவு பெற்றது. 1967 ஜூன் 10ல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. அமெரிக்காவின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ