உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: நாடு காக்க கட்சி வரைகோடுகளை அழித்து விட்டு, மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இங்கு வந்துள்ளனர். எல்லா கட்சி வேறுபாடுகளையும் மறந்து, லோக்சபாவில் உங்கள் குரல் ஒலிக்க நான் வந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழகம் காக்கும் வியூகம்.டவுட் தனபாலு: 'நோகாம நொங்கு திங்குறது'ன்னு கிராமங்கள்ல ஒரு சொலவடை உண்டு... அந்த மாதிரி, அடுத்த வருஷம் ராஜ்யசபா என்ற பின்வாசல் வழியா, பைசா செலவில்லாம பார்லிமென்ட்டுக்குள்ள நுழைய, 'துண்டு' போட்டு வச்சுட்டு வியூகம், தியாகம்னு ஜல்லியடிக்கணுமா என்ற, 'டவுட்'தான் வருது!தமிழக முதல்வர் ஸ்டாலின்: நேற்று முன்தினம் மாலை செய்தி, தாய்மொழியாக தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி. நேற்று காலை செய்தி, அழகிய தமிழ்ச்சொல், 'வானொலி' இருக்க, ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும். ஒரு பக்கம் கண்ணை குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம். கடந்த காலங்களில், தமிழகத்தில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த மோடி, இப்போது ஹிந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன. டவுட் தனபாலு: சில மாதங்களுக்கு முன்பு, 'இண்டியா' கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் நீங்களும், டி.ஆர்.பாலுவும் கலந்துக்கிட்டப்ப, 'ஹிந்தி கத்துக்கிட்டு வாங்க'ன்னு நிதீஷ்குமார் கடுப்படிச்சாரே... அவரிடம் எதுவும் பேசாம, பிரதமரை மட்டும் வம்புக்கு இழுப்பது முறையா என்ற, 'டவுட்' வருதே!கிராமத்து பெண்களிடம், தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியா அன்புமணி: என்னை பற்றி யு டியூப், வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் உரிமைக்காக பேசிய வீடியோக்கள் நிறைய உள்ளன. சாமி கும்பிடுவதை பற்றி அதில் சொல்லி இருக்கிறேன்.டவுட் தனபாலு: சரியா போச்சு... காடு, கழினிக்கு வேலைக்கு போயிட்டு வர்ற கிராமத்து பெண்களிடம் போய், சோஷியல் மீடியாக்கள்ல என்னை தேடி பாருங்கன்னு சொன்னா, அவங்க என்ன செய்வாங்க... உங்க அப்பா, அண்ணன், மாமனார், கணவர் எல்லாம் அரசியல்ல பிரபலமா இருக்கிறது உங்களுக்கு எந்த வகையிலும் அனுகூலமா இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Godfather_Senior
ஏப் 01, 2024 20:24

பதவிபிச்சை எடுக்கும் கோணல் ஹாசனுக்கு, நீ என்றென்றைக்கும் பிச்சைக்காரனாகவே இருக்க வாழ்த்துக்கள் உன்னாலும் உன்னை ஆதரிக்கும் மிஷிநரிகளாலும் உன்னை என்றும் தேர்தலில் ஜெயிக்க வைக்க முடியாது என புரிந்ததும், திமுக விடம் ஒரே ஒரு ராஜ்யசபா சீட்க்காக சரணடைந்தாய் இது மக்களுக்கும் நன்றாகவே புரிந்துவிட்டது ஒழுக்கமும் நன்னெறியும் இல்லாத உன்னைப்போன்ற பதர்கள் அரசியல் பக்கம் வராமல் இருப்பதே மக்களுக்கு நீ செய்யும் தொண்டு


Rajagopal
ஏப் 01, 2024 20:14

வாழ்க்கையிலேயே வரைகோடுகளும், வரம்பும் இல்லாமல் வாழ்ந்த கமலஹாசன், கட்சிக்கான வரைகோடுகளை மணலில் வரைந்து வைத்து விட்டார் அதனால் அவற்றை அழிப்பது சுலபம் மணலில் கோட்டை கட்டி அதுதான் உண்மை என்று தனது வாழ்க்கையை வாழ்ந்தவர்


Pushpa
ஏப் 01, 2024 19:16

குட் நியூஸ்


Narayanan
ஏப் 01, 2024 16:41

வரைகோடுகளை அழித்தவர்கள் தங்களையும் அழித்துக்கொள்ளவேண்டும்


Anantharaman Srinivasan
ஏப் 01, 2024 13:29

சௌம்மியா அன்புமணி ஜெயித்தால் மேல்சபையை அலங்கரிங்கப்போகும் ஒரு அரசியல் வாரிசு மற்றபடி??


Anantharaman Srinivasan
ஏப் 01, 2024 13:23

அடுத்தாண்டு முதல் ஆண்டுகளுக்கு தின்னப்போகும் ராஜ்யசபா என்னும் கரும்புக்கு கூலியாக இத்தேர்தலில் என் பரப்புரை என கமல் விளக்கம் கூறினால் பொருத்தமாயிருக்கும்


Anantharaman Srinivasan
ஏப் 01, 2024 13:18

இந்த பத்து வருஷத்தில் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்திருந்தால் மோடி தமிழை பேச கற்றிருக்க முடியும் திமுக MPs சும் வடகத்திகாரனை சாமாளிக்க ஹிந்தியை கற்றிருக்கலாம்


rajan
ஏப் 01, 2024 08:41

ராஜ்யசபா என்ற பின்வாசல் வழியா, பைசா செலவில்லாம பார்லிமென்ட்டுக்குள்ள நுழைய நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், முருகன் எடுத்த முயற்சி


GoK
ஏப் 01, 2024 09:29

அவர்களுக்கு நீங்க சமமாவீர்களா இங்கே எழுத வந்துட்டார்


HoneyBee
ஏப் 01, 2024 11:04

காமஹாசன் பின் வாசல் வழியாக போய் முன் வாசல் வழியாக தள்ளிக்கொண்டு போவான்


D.Ambujavalli
ஏப் 01, 2024 04:20

கட்சிக் kollaiyai ‘தியாகம்’ செய்தாவது, ஒற்றை மனிதராகப்போய் தேசம் காக்கப்போகிறாராம் அருமையான விளக்கம்


சமீபத்திய செய்தி