உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக காங்., மூத்த தலைவர் இளங்கோவன்: தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது; பேசவும் கூடாது. நல்லவேளை, தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும், அது காமராஜர் ஆட்சிதான். ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். இந்த ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம். காமராஜர் ஆட்சி என, பெயர் வைக்கலாம்; திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம்.டவுட் தனபாலு: தெருவுக்கு தெரு டாஸ்மாக் மதுபான கடைகள், பற்றாக்குறைக்கு தாராளமான கஞ்சா புழக்கம் எல்லாம் காமராஜர் ஆட்சியில இருந்துச்சா என்ன...? உங்களது இந்த பேச்சை கேட்டு, காமராஜர், கக்கன் ஆன்மாக்கள் ரத்தக்கண்ணீர் வடிச்சிருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: காமராஜர்கண்ட கனவை ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது. இதை, சட்டசபையில் பலமுறை பாராட்டி பேசியுள்ளோம். டவுட் தனபாலு: 'சீட் பிரிச்சு கொடுக்கிற இடத்துல நாம இருக்கணும்'னு உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டீங்க... இப்ப, 'காமராஜர் கனவை ஸ்டாலின் நிறைவேத்திட்டு இருக்கார்'னு அந்தர்பல்டி அடிச்சுட்டீங்களே... எங்க இருந்தோ உங்களுக்கு, 'பாட்டு' விழுந்திப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!காங்., - எம்.பி., ராகுல்: ரேபரேலி தொகுதியில் நான் வெற்றி பெற்றால், அங்கு என்ன வளர்ச்சி திட்டங்கள் நடக்கிறதோ, அவை அனைத்தும் அமேதிக்கும் செய்து தரப்படும். அங்கு 10 ரூபாய் செலவு செய்தால், இங்கும் அதே தொகை செலவிடப்படும். டவுட் தனபாலு: ஏற்கனவே, அமேதி தொகுதி எம்.பி.,யா இருந்த பாசத்துல பேசுறது நல்லாவே தெரியுது... தப்பி தவறி, உங்க கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும், இந்த ரெண்டு தொகுதிகளை மட்டும் தான் ஊட்டி வளர்ப்பீங்க; மற்ற தொகுதிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையில தான் நடத்துவீங்களோ என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
மே 19, 2024 20:53

தயவு செய்து இப்போது உள்ள காங்கிரசு தலைவர்கள் யாருமே காமராசரையும் கக்கனைப்பாற்றியும் பேச துளி கூட அருகதை அற்றவர்கள் அவர்கள் மக்களின் தெய்வம் மக்கள் குறைகளை அவர்கள் மகேசன் குரலாக நினைத்து பாடுபபவர்கள் அந்த அரசியல் மகான்களை இப்போது உள்ள தலைவர்களுடன் ஒப்பிடவே வேண்டாம்


sankar
மே 19, 2024 18:53

"கற்பூரம் சுமக்கும் கழுதைகள்" என்று காங்கிரஸாரை அன்று பாராட்டியவர் இந்த போண்டாவாயர்


M Ramachandran
மே 19, 2024 10:03

காங்கரஸ் கட்சியின் பாரம்பரியமும் தெரியாது குருட்டு பூனையய விட்டதில் பாய்ந்த கதையாய் இது அங்கே பாய்ந்து இங்கே பாய்ந்து கடையசியில் திமுக காங்கிரஸில் சேர்ந்திருக்கு இது எல்லாம் காங்கரஸ் என்ற பெயர் சொல்ல தகுதி இல்லாத ஆள் பஞ்சத்துக்கு ஆண்டி தமிழ்நாடு காங்கரஸ் தலைவராகா இருப்பவர் இது மாதிரி பொது வெளியில் காமராஜாறை அவமான படுத்ததே என்று சொல்ல வேண்டும்


Murugesan
மே 19, 2024 09:55

கேவலமான கேடுகெட்ட அயோக்கியர்கள் காங்கிரஸ்காரனுங்க ,கேவலமான திருட்டுகூட்ட ஆட்சியை காமராஜருடண் ஒப்பிடும் இவனுங்க....


D.Ambujavalli
மே 19, 2024 06:25

மூன்று தலைமுறைகளாக இந்த காமராஜர், கக்கன் பல்லவியையே பாடும் இவர்கள், அவரை அவமதித்த இவர்களின் பாட்டில் விரக்தியுற்று விலகிய நிகழ்வை எண்ணிப் பார்க்கட்டும் எட்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்து மாநிலத்தையே வளைத்துப் போடுவர்களை காமராஜருடன் ஒப்பிடுவதை தயவுசெய்து நிறுத்துங்களேன்


GANESUN
மே 19, 2024 04:31

₹ உபிஸ விட கேவலமா போச்சு நம்ம நிலம


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை