உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை, பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். அது போதாது. போதை பொருள் நடமாட்டம் என்பது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல; சமூக ஒழுங்கு பிரச்னை. எனவே, கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், மக்கள் நல்வாழ்வு, நகராட்சி துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போதை பொருட்கள் நடமாட்டம் அறவே இல்லை; முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.டவுட் தனபாலு: பெருமளவுகட்டுப்படுத்தி தான், மூலைக்கு மூலை கஞ்சா விற்பனை சக்கை போடு போடுதா... போதை பொருட்கள் அறவே இல்லை என்ற நிலையை எட்ட, உங்க அதிகாரிகளும், போலீசாரும்இன்னும் உழைக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: ரேஷன் கடைகளில் வழங்க, 20,000 டன் கனடா மஞ்சள் பருப்பு வாங்க முடிவு செய்துள்ள தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், கிலோவுக்கு 165 ரூபாய் விலை தர உள்ளது. இதன் சந்தை விலையே, 130 ரூபாய் தான். அதனால் தயக்கம் காட்டும் அதிகாரிகளுக்கு, அந்த விலைக்கே கனடா பருப்பு வாங்குமாறு, துறை மேல்மட்டத்தில் நெருக்கடி கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.டவுட் தனபாலு: சந்தை விலையே 130 ரூபாய் என்றாலும், மொத்தமா டன் கணக்கில் வாங்கினா, அதை விட குறைந்த விலைக்கு தருவாங்களே... அதை விட்டுட்டு, சந்தை விலையை விட கூடுதலாக, 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, மக்கள் வரிப்பணத்தை முழுங்க பார்க்கும் முதலைகள் செயல்பாடு, முதல்வரின் கவனத்துக்கு வரலையா என்ற, 'டவுட்' எழுதே!அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் எஸ்.யுவராஜ்: தமிழகத்தில் இருந்த 17க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 30 லட்சம் கட்டட தொழிலாளர்களும், மணல் லாரி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மணல் குவாரிகளை திறக்க வேண்டும். டவுட் தனபாலு: மணல் குவாரிகள்ல ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்து, அமலாக்க துறை விசாரணை வரைக்கும் போனதால் தானே, அவற்றை மூடியிருக்காங்க... மணலுக்கு மாற்றாக, எம்.சாண்ட் போன்ற பொருட்கள் வந்துடுச்சே... இனியும், மணலை சுரண்டி, ஆற்றை பாழாக்கணுமா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 13, 2024 22:06

போதை ஒழிப்பா ???? மக்கள் சாவியை யார் கையில் கொடுத்துள்ளார்கள் ????


என்றும் இந்தியன்
ஜூன் 13, 2024 16:44

கிலோவுக்கு 165 ரூபாய் விலை தர உள்ளது. இதன் சந்தை விலையே, 130 ரூபாய் தான். மொத்தமாக அங்கும் போது இன்னும் குறைந்து ரூ 117 க்கு கிடைக்கும் அதாவது ரூ 48 ஒரு கிலோவிற்கு - அப்போது கமிஷன் 41% மட்டும் தான் திமுகவிற்கு போகும். சே சே மிக மிக குறைந்த கமிஷன் வெறும் ரூ 96 கோடி மட்டும் தான் கிடைக்கின்றது திருட்டு திராவிட மடியல் அரசுக்கு, குறைந்தது 50% ஆவது கிடைத்தால் தான் திருட்டு திராவிடம் சந்தோஷமடையும்.


TIRUPUR MAYILVAGANAN SIVAKUMAR
ஜூன் 14, 2024 10:35

நூற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை,


என்றும் இந்தியன்
ஜூன் 13, 2024 16:34

"போதை மருந்து விற்பனையை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டோம்". அதாவது இவர்கள் மட்டும் தான் அதை விற்பனை செய்யமுடியும் என்று அர்த்தம்.


GoK
ஜூன் 13, 2024 09:07

போதை மருந்து "நடமாட்டத்தை" நிறுத்திட்டோம் இப்போவெல்லாம் சரக்கு வண்டியிலதான் போவுது


raja
ஜூன் 13, 2024 07:43

திருட்டு திமுகாவின் அடிமை ஊடகங்கள் போலவே விடியலுக்கு ஒன்றுமே தெரியாது போலவும் அதிகாரிகள் மட்டுமே தவறு செய்கிறார்கள் என்று கூற காரணம் நார்பதும் வென்ற பயம் என்று புரிந்து விட்டது...


D.Ambujavalli
ஜூன் 13, 2024 06:25

அதிகாரிகள், போலீஸ் மட்டும் உழைத்துவிட்டால் போதுமா? சாதிக் போல பெரிய இடத்தின் நட்பு, கூட்டுறவு கிடைத்த தெம்பில்தான் பலர் தெரியமாகப் போதைப்பொருள் புழங்க விடுகிறார்கள் என்பது முதல்வருக்குத் தெரியாதா ?


Bharathi
ஜூன் 13, 2024 03:28

விக்கறது மகனோட கூட்டாளி கட்சியில நிர்வாகி. அப்பாரு அத தடுக்க போலீசை முடுக்கி விடறாராம். கேட்கறவன் கேனையனா இருந்தா என்ன வேணா பேசுவாங்க


angbu ganesh
ஜூன் 13, 2024 10:50

சென்னை சைதாப்பேட்டை ல வந்து பாக்க சொல்லுங்க


சமீபத்திய செய்தி