உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பல மொழி கற்றால் பார்லி., செல்லலாம்!

பல மொழி கற்றால் பார்லி., செல்லலாம்!

ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தருமபுரி லோக்சபா தொகுதியில், பா.ம.க., வேட்பாளர் சவுமியா போட்டியிடுகிறார். அவர் கடந்த வாரம், கொளத்துார் ஒன்றியம் காவேரிபுரம் ஊராட்சி சத்யா நகரில் வசிக்கும் முஸ்லிம்களை சந்தித்து, ஹிந்தியில் பேசி ஓட்டு சேகரித்துள்ளார்.அவர்கள் கேட்ட குடிநீர் பற்றாக்குறை போன்ற கேள்விகளுக்கு, 'எனக்கு ஓட்ட ளித்தால் உங்களின் அனைத்து பிரச்னையையும் தீர்த்து வைக்கிறேன்' என, ஹிந்தியிலேயே பதிலளித்துள்ளார். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், காங்., சார்பில் கோபிநாத் என்பவர் போட்டியிடுகிறார். அவரும், கடந்த வாரம் ஓசூர் எம்.ஜி., சாலையில் உள்ள ஜாமியா மஸ்ஜித் மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களை கட்டித்தழுவி, அவர்களிடம் உருது மொழியில் பேசி, கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டுள்ளார். லோக்சபாவுக்கு சென்று தங்கள் தொகுதிகளின் குறைகளை கூறி, தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் சிலரே. மற்றவர்களெல்லாம், ஹிந்திமொழி படிக்க பேசத் தெரியாத தலையாட்டி பொம்மைகளாக செயல்படுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.இந்நிலையில் பல மொழிகளை கற்ற வேட்பாளர்கள் சவுமியா, கோபிநாத் போன்றோரை தேர்வு செய்து பார்லி.,க்கு அனுப்பும் பட்சத்தில், அவர்கள் தொகுதி மக்களுக்காக குரல் எழுப்பி, பல நன்மைகளை பெற்றுத் தருவர் என்பது உறுதி. 'ஹிந்தி, ஆங்கிலம் தெரிந்தால் பார்லிமென்ட் செல்ல வேண்டும். இரண்டும் தெரியாதவர்கள் நம்மூரோடு நின்று விட வேண்டும்' என, சமீபத்தில் தி.மு.க., அமைச்சர் துரைமுருகனே கூறியிருக்கிறார். அவர் கூறியது நுாறு சதம் உண்மையான வார்த்தை. ஆகவே வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்கள், தெளிவாக சிந்தித்து, சரளமாக ஹிந்தி பேசத் தெரிந்த வேட்பாளர்களுக்கு ஓட்டளித்து, அவர்களை வெற்றி பெறச் செய்து, பார்லி.,க்கு அனுப்பினால், அது நாட்டிற்கும், நமக்கும் நன்மை பயக்கும்.

நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன?

கே.ஆர்.பிரேம் குமார், பெங்களுரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் படித்ததால், தன்னை அறிவாளியாகவும், பொருளாதார மேதையுமாகவும் எண்ணி கொள்ளும் ப.சிதம்பரம் அவர்களே...எவர் ஒருவர், தனக்கு வேலை அவசியம் என எண்ணம் கொண்டிருந்தாலும், அவருக்கு இந்தியாவில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. எனது, 16-வது வயதில் உழைக்க தொடங்கிய நான், இதோ இந்த 75-வது வயதிலும் வேலை பார்த்தபடி தான் இருக்கிறேன்.பலர் வேலை இல்லாமல் இருக்க, மத்திய அரசோ, அவர்களது பெற்றோரோ குற்றவாளிகள் அல்ல. இப்படி, பலர் உழைக்க தயாராக இருந்தும், மாநில அரசுகள், மாதாந்திர உதவியும் தொகை ஆசையை காட்டி, அவர்களின் வேலை தேடும் எண்ணத்திற்கு ஆப்பு அடித்து விடுகின்றன.எந்தவொரு வேலையும் செய்யாமல், சிறுவயது முதலே, அரசு பணமாக மாதா மாதம் ஒரு தொகை கைக்கு வந்து விட்டால், 'இரண்டே இரண்டு சட்டை, ஒரு லுங்கி போதும்; மூணு வேளை ரேஷன் சோறு போதும்; அதை மீறி பசித்தால், இருக்கவே இருக்கு சரக்கு' என்ற எண்ணத்தில் வாழ்பவர்கள், எப்படி வேலைக்குச் செல்வர்?இந்தக் கணக்கை வைத்து தான், ஹார்வார்டு பல்கலைக் கழகக்காரர், அடித்து விடுகிறார் வேலை இல்லா திண்டாட்டம் இங்கு இருக்கிறது என்று!நீதிமன்றங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன எனத் தெரியவில்லை!

என்ன நியாயம் சார் இது?

எஸ்.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை' எனக் கூறி, தமிழக அரசு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. என்னைப் போன்ற சாமானியனுக்கு, நிவாரணம் என்பது உதவி தானே தவிர, உரிமை இல்லை.உதவி செய்யாததற்கு வழக்கு போடும் தமிழக அரசு, பஞ்சப்படி எனும் உரிமையை வழங்காததற்கு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் போட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கிறது. இது எந்த உணர்வுடன் நீதிமன்றத்தை அணுகி, மத்திய அரசு மீது வழக்கு போட்டது?முப்பது ஆண்டுகள் அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து வெறும் கையுடன் வீடு திரும்பும் ஓய்வூதியர்களுக்கு தர வேண்டிய பஞ்சப் படியை, உரிய முறையில் வழங்காமல் இருந்த நிலையில், 'நான் ஆட்சிக்கு வந்த 100 நாளில் நிறைவேற்றுவேன்' என நயவஞ்சகமாக பேசி, அரசு ஊழியர்களை மயக்கி, ஆட்சிக்கு வந்தபின், 'கம்பி' நீட்டிவிட்டார் முதல்வர்.என்ன நியாயம் சார் இது?

எது நல்லது? சிந்தியுங்கள்!

என்.எம்.முத்து, திருச்செந்துாரிலிருந்து எழுதுகிறார்: அனைவருக்கும் ஆதார் என்ற அடையாளத்தை கொடுத்து, ஒவ்வொரு குடிமகன் - குடிமகளையும் தலை நிமிர்ந்து நடக்க வைத்தவர்.கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியவர்; வங்கியில் கணக்கில்லாத அனைவருக்கும் பணம் போட்டு வங்கி கணக்கை துவங்கி வைத்தவர்; ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சைக்கு வழி வகுத்தவர். பணப் பறிமாற்றத்தை, 70 சதவீதத்திற்கு மேலாக டிஜிட்டல் மயமாக மாற்றி வெகுவாக லஞ்சம் ஊழலை குறைத்தவர்; கொரோனா காலத்தில் அற்புதமாக செயல்பட்டு உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை வியந்து பார்க்க வைத்தவர். தொலைநோக்கு சிந்தனை யாளர், நல்லவர் உறுதியானவர், தெய்வ பக்தி நிறைந்தவர். இப்படிப்பட்டவரின் தலைமையில் ஆட்சி அமைவது நல்லதா அல்லது கூட்டணிக் கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று, அவர்கள் கேட்கும் பதவிகளையெல்லாம் கொடுத்து, தாங்கள் பதவியில் இருந்தால் போதும் என்று நினைக்கும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது நல்லதா? சிந்தியுங்கள்!

தி.மு.க.,வுக்கு நாம் முட்டாள்களே!

சதீஷ் குமார், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின் விளம்பரங்களில், இரண்டரை ஆண்டு கால சாதனை என, 9,000 கோடியே 60 லட்சம் முதலீடுகளை ஈர்த்ததாகவும், 30 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.இந்த 30 லட்சம் பேரில், யார் யாருக்கு என்னென்ன தகுதி என, வெள்ளை அறிக்கை விட முடியுமா? 'டவுட்' ஏற்படுவதால் இந்த கேள்வி!எதை வேண்டும் என்றாலும் சொல்லலாம்; ஜெயித்து விடலாம் என்ற மிதப்பில் இருக்கும் தி.மு.க., சொத்து வரி, மின் கட்டண வரி உயர்வு; பால் விலை உயர்வு; டாஸ்மாக் மது புட்டி விலை உயர்வு ஆகியவற்றின் மூலம், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும், மாதா மாதம் தலா 5,000 ரூபாய் பிடுங்குகிறது.பெண்களுக்கு, 1,000 ரூபாய், இலவச பஸ் பயணம் எனக் கொடுத்து, இப்படி கொள்ளை அடிக்கிறது.ஆக... தி.மு.க.,வுக்கு, அதன் விளம்பரத்தைப் படிக்கும் நாமெல்லாம் முட்டாள்களே! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

gayathri
ஏப் 23, 2024 09:48

ஹிந்தி மொழியில் பேசுபவர்களே பார்லியமென்ட் போய் நிறைய பேர் வாய்மூடி மௌனியாக இருக்கிறார்களே அதற்க்கு என்ன பதில் பேச்சு திறமை உள்ளவர்கள், அறிவார்ந்தவர்கள், நாட்டு நலனில், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் மட்டுமே மற்றும் சபையில் பேசுகிறார்கள் எல்லோராலும் அது சாத்தியமில்லை இந்த தளத்தில் கருத்து எழுதுவது வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம்


gayathri
ஏப் 23, 2024 09:38

நாட்டில் நிறைய பேர் எதுவுமே செய்யாமல் இந்த விலை போன ஊடகங்களில் கருது எழுதுவதை மட்டுமே வேலையாக கொண்டுள்ளோம் என்னையும் சேர்த்துதான்


Anantharaman Srinivasan
ஏப் 16, 2024 23:49

ப சிதம்பரம் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்தவரா? என்ன படித்தார்?


Anantharaman Srinivasan
ஏப் 16, 2024 23:36

சென்னை தேவதாஸ் எழுதியுள்ளது போல் தர்மபுரி வேட்பாளர்கள் காங் கோபிநாத், பாமக சௌமியா போன்ற இந்தி தெரிந்தவர்களுக்குத்தான் நாம் ஓட்டளிக்க வேண்டும் தமிழிசை சௌந்தர்ராஜன், முருகன், அண்ணாமலை போன்ற வேட்பாளர்களுக்கு இந்தி தெரியாது ஓட்டளிப்பது வேஸ்ட்


கண்ணன்
ஏப் 16, 2024 09:47

ப சி தன்னை ஒரு பொருளாதாரப்புலி என நினைத்துச் சூடு போட்டுக் கொண்ட பூனை தெரு ஓரத்தில் காய்கறி விற்பவருக்குள்ள பொருளாதார அறிவோ அறிவியலைப் பயன்படுத்தும் அறிவோ அற்றவர்தான் அவர்


D.Ambujavalli
ஏப் 16, 2024 07:10

கலைஞர் ஹிந்தி, ஆங்கிலம் தெரியும் என்று தயாநிதி, கனிமொழியை மத்தியில் பேச அனுப்பினார் மொழி தெரிந்தும் ஹிந்தியில் பேச மாட்டேன், என்று தமிழில் பேசி என்று அடம் பிடித்தது தவிர, இவர்கள் மாநிலத்துக்காக என்ன செய்து கிழித்தார்கள்? கான்டீன் வடை, போண்டா தின்னவும், நினைத்தபடி வெளிநடப்பு செய்யவும் மொழி அறிவு எதற்கு என்பதுதான் திராவிட சித்தாந்தம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை