உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஜெயிச்சிடுவோம்னு நம்புறாரு!

ஜெயிச்சிடுவோம்னு நம்புறாரு!

திருப்பூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலம் அறிமுக கூட்டம், மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.இதில் அருணாசலம் பேசுகையில், 'பெருந்துறை நகராட்சி கவுன்சிலராக இருமுறை பணியாற்றினேன். கூட்டுறவு தேர்தலில் தலைவர் பதவி கேட்டேன்; கிடைக்கவில்லை. பின், எனக்கு துணை தலைவர் பதவி கொடுக்க முன்வந்தனர். என் தந்தை, 'கேட்டது கிடைக்கலைன்னா, கொடுக்கறத வச்சுக்கோ... அப்ப தான் அரசியலில் மேல வரமுடியும்' என, அறிவுரை வழங்கினார். அதேபோல், துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டேன். தற்போது, டில்லி செல்லும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்' என்றார்.கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'நம்ம வேட்பாளர் உறுதியா ஜெயிச்சிடுவோம்னு நம்புறாரு... இப்படி தான் பாசிட்டிவ்வா இருக்கணும்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் தலையாட்டியபடி நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை