உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / குடிமகன்கள் கஷ்டம் புரிஞ்சவங்க!

குடிமகன்கள் கஷ்டம் புரிஞ்சவங்க!

திருப்பூரில், அ.தி.மு.க., சார்பில் நடந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில், அக்கட்சி தேர்தல் பிரிவு செயலர், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சியில் தமிழகம் மிகப்பெரிய போதை சாம்ராஜ்யமாக மாறிவிட்டது. கஞ்சா, அபின், கஞ்சா சாக்லேட் புழக்கத்தில் உள்ளன. 'டாஸ்மாக்'கில் கோதுமை பீர் அறிமுகம் செய்துள்ளனர். வித விதமான போதை பொருட்கள் அறிமுகம் செய்வது தான் திராவிட மாடல் ஆட்சியின் தத்துவம். 'எதிர்க்கட்சியாக இருந்த போது, டாஸ்மாக்கை மூட, போலி போராட்டம் நடத்தினர். தி.மு.க., - எம்.பி., வேட்பாளர்களும், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரும், சாராய ஆலை பங்குதாரர்களாக உள்ளனர்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'இவங்க எதிர்க்கட்சி ஆகி, மூணு வருஷம் ஆச்சு... இதுவரைக்கும், டாஸ்மாக்கை மூட கோரி, ஒரு போராட்டமும் நடத்தல; 'குடி'மகன்கள் கஷ்டம் புரிஞ்சவங்க...' என, 'கமென்ட்' அடித்த படி நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 06, 2024 10:12

டாஸ்மாக் மூடல் என்று கிளம்பினால், அம்மா காலம் முதல் ஒவ்வொரு தேர்தலுக்கும் அளித்த டாஸ்மாக் வாக்குறுதிகள் பூமராங் போலப் பாயும் என்று இவருக்கு தெரியுமே அதனால்தான் அந்த சப்ஜெக்ட்டை கோதுமை பீரொடு சாத்விகமாக முடித்துவிட்டார்


புதிய வீடியோ