உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தி.மு.க., தயவில் பிழைப்பு ஓடுது!

தி.மு.க., தயவில் பிழைப்பு ஓடுது!

கிருஷ்ணகிரியில் நடந்த, காங்., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார். அப்போது கூறுகையில், 'பா.ம.க., இட ஒதுக்கீட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது பா.ஜ., கட்சி. இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர். இன்னும் சொல்லப் போனால், ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு முதல் எதிரி பா.ஜ., தான். அக்கட்சியுடன் எப்படி இவர்கள் கூட்டணி வைத்தனர். இட ஒதுக்கீட்டிற்காக போராடி உயிர் நீத்தவர்களின் ஆன்மா அவர்களை மன்னிக்காது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டிய தி.மு.க.,வுடன் இவர்கள் கூட்டணி வைக்கலாமா...?' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அதே தி.மு.க., தயவில் தான் தமிழகத்தில் காங்கிரஸ் பிழைப்பு ஓடுது... இல்லைன்னா என்னைக்கோ காணாம போயிருக்கும்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

krishnamurthy
மே 18, 2024 17:25

முடவன் கொம்பு தேன் கதை


veeramani
மே 18, 2024 09:31

இட ஒதுக்கீடு இந்தியாவில் பலவருடங்களாக தலித் மக்களுக்கு மட்டும் நடைபெற்றது மற்றைய பின்தங்கிய வகுப்பினர் கேவலமாக பிழைப்பு நடத்துகின்றனர் இவர்களும் இந்திய குடிமக்கள்தான் எனவே தலித் இட ஒதுக்கீடை ரத்து செய்து பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு அனைத்து அரசுகளும் கொடுத்துவிடல்வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை