உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மக்கள் ஓட்டு போடணுமே!

மக்கள் ஓட்டு போடணுமே!

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, காஞ்சிபுரத்தில் ஓட்டு சேகரித்தார். அப்போது, கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து, 'நம் கூட்டணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போடுவீர்களா... நீங்கள் போடுவீர்களா...' என, ஒவ்வொரு திசையாக திரும்பி பார்த்து கேள்வி கேட்டு, பதில் பெற்றார்.அ.தி.மு.க.,வின், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த பாணியில் தான் பிரசாரம் செய்வார். அவரை பின்பற்றி, பிரேமலதா கேள்விகள் கேட்டு, பொதுமக்களிடம் இருந்து பதில் பெற்றதால், அ.தி.மு.க., தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.பார்வையாளர் ஒருவர், 'ஜெயலலிதா பாணியில் இவங்க பிரசாரம் பண்றதெல்லாம் சரி... மக்கள் ஓட்டு போடணுமே...' என, முணுமுணுக்க, மற்றொருவர், 'மக்கள் மனசுல இடம் பிடிச்சிட்டா, ஓட்டு மாறவே மாறாது...' என, பேசியபடி நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
ஏப் 08, 2024 14:08

திமுக அடிமையாக இல்லை என்றால் இப்படி சொல்ல மாட்டிங்கள்


D.Ambujavalli
ஏப் 08, 2024 08:16

எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த கட்சியை ஆழும் பாழும் ஆக்கி , முளைவிடும் முன்பே குடும்பத்தை நுழைத்து, தலைவரை செல்லாக்காசாகி, கூட்டணி பேரத்தில் கட்சி கட்சியாகத் தாவி தொண்டர்களுக்கே வெறுப்பேற்றிவிட்டு எல்லாம் ஓட்டுக்களுடன் வரிசையில் நிற்பார்கள் என்று எதிர்பார்ப்பதை என்ன என்பது ?


சிவ.இளங்கோவன் .
ஏப் 08, 2024 03:40

ஒருவேளை பிரேமலதா அவர்கள் பாஜக கூட்டணி யில் இருந்திருந்தால் இந்த செய்தியை நீங்கள் போட்டிருக்க மாட்டீர்கள்


சமீபத்திய செய்தி