உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கட்சி மாறியது தான் காரணம்!

கட்சி மாறியது தான் காரணம்!

துாத்துக்குடி மாவட்டம், புதுார் யூனியன் கவுன்சிலர் பெருமாள்சாமி, தி.மு.க., சார்பில் வெற்றி பெற்று, பின் அ.தி.மு.க.,வில் இணைந்தார். விளாத்திகுளம் - மதுரை சாலையில் சில நாட்களுக்கு முன் தள்ளுவண்டியில் பானிபூரி கடை திறந்தார்.கடையை காலி செய்ய போலீசார் எச்சரித்தனர். விளாத்திகுளம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன் தலைமையில் பெருமாள்சாமி உட்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர் டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்றனர்.டி.எஸ்.பி., ராமகிருஷ்ணனிடம், 'கடையை ஏன் காலி செய்ய வேண்டும்' என, கேட்க, டி.எஸ்.பி., 'அந்த இடத்தில் விபத்து வாய்ப்பு இருப்பதால் வேறு இடத்திற்கு செல்லுங்கள்' என்றார். அப்போது, கட்சியினர் எதிர் கேள்வி கேட்க, டி.எஸ்.பி., - அ.தி.மு.க.,வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதை வேடிக்கை பார்த்த காவலர் ஒருவர், 'இவ்வளவு அப்பாவியா வந்து கடையை காலி செய்ய காரணம் கேட்குறாரே... கட்சி மாறியது தான் காரணம்னு இன்னுமா புரியல...' என, முணுமுணுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கல்யாணராமன் சு.
மே 05, 2024 21:30

கௌன்சிலருக்கு ஹிந்தி தெரியுமா ? ஏனென்றால் ஹிந்தி தெரிஞ்சவங்க பாணி பூரி விக்கத்தான் லாயக்குன்னு நமது திருடர்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் மேடை தோறும் முழங்கி வருகின்றனரே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை