உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவங்களும் வர மாட்டாங்க!

இவங்களும் வர மாட்டாங்க!

கோவை லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, பொங்கலுார் அருகே திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், 'கொடுக்கிற தெய்வம் ஸ்டாலின் வேண்டுமா; பறிக்கிற மோடி வேண்டுமா? இலவசம் வேண்டாம் என்பவர்களை துரத்தி அடியுங்கள்' என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், 'மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் எனக்கு கிடைக்கவில்லை. எப்போது வரும். ஏன் எனக்கு உரிமைத் தொகை வரல...?' என, அவரிடம் கேள்விகளை அடுக்கினார்.இதற்கு செல்வராஜ், 'தேர்தல் முடிந்ததும் வரும்...' என்றார். இதை கேட்ட மற்றொரு பெண், 'நல்லா வரும்... தேர்தல் முடிஞ்சதும் உரிமைத் தொகையும் வராது... இவங்களும் வர மாட்டாங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 09, 2024 06:56

மொத்தத்தில் எல்லாப் பெண்களும் சேர்ந்து எம் எல் ஏ , அமைச்சர்களை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை