உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / புள்ளி விபரத்தை அடுக்குறாரே!

புள்ளி விபரத்தை அடுக்குறாரே!

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் ஒன்றியம், பிராமணம்பட்டி ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், 'அனைத்து மாநில அரசுகளும் செலுத்தும் வரி தொகையை வைத்து தான் மத்திய அரசு இயங்குகிறது. ஆனால், அந்த வரி தொகையை மாநிலங்களுக்கு பிரித்து தருவதில், மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.'மஹாராஷ்டிராவிற்கு அடுத்ததாக, அதிக வருவாய் தருவது தமிழகம்... நாம், ஒரு ரூபாய் வரி அளித்தால், அவர்கள் நமக்கு திருப்பி தருவது, 29 காசு தான். ஆனால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அவர்கள், ஒரு ரூபாய் கொடுத்தால், 3 ரூபாய் சேர்த்து கொடுக்கின்றனர். நமக்கு தரும், 29 காசுகளிலும் பாக்கி வைக்கின்றனர்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'இப்படி புள்ளி விபரத்தை அடுக்குறாரே... கட்சியில நல்லா பாடம் நடத்தியிருப்பரோ... நிதியமைச்சர் ஆகிடுவார் போலிருக்கிறதே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி