உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நான் சொன்னது சரியா போச்சு!

நான் சொன்னது சரியா போச்சு!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, காந்தி நகர் ரேஷன் கடையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 9:00 மணிக்கே ரேஷன் கடை முன் பொதுமக்கள் குவிந்தனர்.முற்பகல், 11:00 மணிக்கு ஆளுங்கட்சியினர் ரேஷன் கடைக்கு வந்து, பொங்கல் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.கரும்பு, பணம், பொங்கல் பொருட்கள் வாங்கிய பெண்களை வரிசையாக நிற்க வைத்து, நடுவில் ஆளுங்கட்சியினர் நின்று, போட்டோ எடுத்துக் கொண்டனர்.அப்போது நகர செயலர் ரவி, 'முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு கொடுங்கள்; தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள்' என, பெண்களிடம் ஓட்டு சேகரித்தார்.பார்வையாளர் ஒருவர், 'இவ்வளவு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், லோக்சபா தேர்தலுக்காக தான், 1,000 ரூபாய் கொடுக்குறாங்கன்னு நான் சொன்னது சரியா போச்சு பார்த்தீங்களா...' என, உடன் வந்தவரிடம் கூற, அவரும் தலையாட்டிக் கொண்டே நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி