உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஆட்சிக்கு வந்தா பார்க்கலாம்!

ஆட்சிக்கு வந்தா பார்க்கலாம்!

சவுராஷ்டிரா சமூக முன்னோடி தலைவர்களில் ஒருவரான துளசிராம், 154வது பிறந்தநாள் விழா மற்றும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நுாற்றாண்டு விழா மதுரையில் நடந்தது.விழாவில் அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணனுக்கு சமூக நல்லிணக்க மருத்துவர் பட்டம் வழங்கப்பட்டது.அப்போது அவர் பேசுகையில், 'தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்ததும், துளசிராமை பெருமைப்படுத்தும் வகையில் மதுரையில் மணிமண்டபம் அமைக்கும் கோரிக்கையை முன் வைப்பேன்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'அ.தி.மு.க., இருக்கிற லட்சணத்துல, இப்படி பேசுறாரே! இவங்க ஆட்சிக்கு வந்தா பார்க்கலாம்...' என, 'கமென்ட்' அடித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி