உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கலெக்டரிடம் கத்துக்கணும் பா!

கலெக்டரிடம் கத்துக்கணும் பா!

கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில், கலெக்டர் சரயு பங்கேற்றார். அவர் பேசுகையில், 'நான் பள்ளியில் படித்த போது, கேரள மாநிலத்தில் இலவச சைக்கிள் திட்டம் கிடையாது. நான், ஐந்தாம் வகுப்பு முதல் சைக்கிள் வாங்க பணம் சேர்த்து வந்தேன். எட்டாம் வகுப்பு படித்த போது என்னிடம் சேர்ந்த, 1,500ரூபாயுடன் என் தந்தை, 1,000 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.'சைக்கிள் வாங்க எனக்கு மூன்று ஆண்டுகள் ஆகின. தமிழக அரசோ, பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு செய்யும் கடமை போல், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குகிறது' என்றார்.இதை கேட்ட தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'கலெக்டர் பேச்சுல பின்றாங்களே... நாமெல்லாம் அவங்களிடம் கத்துக்கணும் போலிருக்கு பா...' என முணுமுணுக்க, அருகில் இருந்த நிர்வாகிகள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஆக 15, 2024 16:58

தனது சொந்த சேமிப்பு, தந்தையின் பங்களிப்பு என்று பெருமையாக கூறிக்கொள்ளலாம். அரசு இலவசம் எல்லாம் பெற்றவர்கள் எதற்கும் முன்வர மாட்டார்கள், நாங்கள்தான் பெற்றோரின் கடமைகளை செய்கிறோம் என்று பிள்ளைகளின் மனத்தில் ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்தி விடும் பேச்சாக உள்ளது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 15, 2024 13:27

அடிக்கடி டிரான்ஸ்ஃபர் என்றால் தாங்க மாட்டார் ..... அங்கன்வாடியில் தனது இரண்டு வயதுக்குழந்தையை சேர்த்த கலெக்டர் ....


புதிய வீடியோ