உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!

பள்ளிக்கல்வி துறை சார்பில், 'அறிவியலை மாணவர்களுக்கு எளிமையாக கற்பிப்பது எப்படி' எனும் தலைப்பில், ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி, திருப்பூர் தனியார் மகளிர் கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி முதல்வர் எழிலி பேசுகையில், 'என்பி லதனை வெயில் போலக் காயுமே அன்பி லதனை யறம் என்கிறது திருக்குறள்; எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்த்து, வருத்துவது போல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும் என்பது இதன் பொருள்...'எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர், எலும்பு, அதன் செயல்பாடு, அதற்குள் இருக்கிற கால்சியம், அதற்கும், வெயிலுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி எல்லாம் விளக்கம் அளித்தார்' என்றார்.ஆசிரியர் ஒருவர், 'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்... திருக்குறளும், அறிவியலும் ஒன்றாக போதிச்ச மாதிரி ஆகிடும்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து, சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை