உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / குல்லா போட்ற போறாங்க!

குல்லா போட்ற போறாங்க!

ம.தி.மு.க., சார்பில், இளையோர் தேர்தல் பயிலரங்கம் நிகழ்ச்சி, கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ தலைமையில் சென்னையில் நடந்தது. இதில், தமிழகம் முழுதும் இளைஞரணி, மாணவரணியை சேர்ந்த, 2,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தேர்தல் நேரத்தில் இளைஞரணி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என, பூத் கமிட்டி உறுப்பினர்கள் பணி குறித்து, பேராசிரியரை போல, துரை பாடம் நடத்தினார். இதை, மாவட்ட செயலர்களுடன், கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களும் ஆர்வமாக கேட்டனர்.மதுரை தெற்கு தொகுதி, ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., பூமிநாதன் இறுதியாக உணர்ச்சி பொங்க பேசுகையில், 'தேர்தல் பயிலரங்கம் வெற்றி பெற்றதை போல, லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., வெற்றி, நுாறு சதவீதம் உறுதி' என்றார்.இளைஞரணி நிர்வாகி ஒருவர், 'முதலில் கூட்டணியில் ரெண்டு சீட்டை வாங்குங்க... தி.மு.க.,வினர் குல்லா போட்ற போறாங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை