| ADDED : மே 20, 2024 09:17 PM
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'இண்டியா' கூட்டணி
கொள்கையில் குழப்பம். மம்தா, நாடு முழுதும் கூட்டணி; மேற்கு வங்கத்தில்
மட்டும் எதிரணி. லட்சியம் இல்லை. ஒன்றாகாதவர்கள் அத்தனை பேரும் ஒன்றாக சேர
முயற்சிப்பது தெரிகிறது. அது பார்க்க நன்றாக இல்லை. இந்த தேர்தலில் இவர்கள்
மானம் கப்பல் ஏறப் போகிறது.அவர்கள் மானம் கப்பல் ஏறுவது இருக்கட்டும்... தமிழகத்தில், ஒன்றிரண்டு தொகுதியிலாவது வெற்றி பெறலைன்னா இவங்க மானம் பிளைட்ல பறக்கும்!மா.கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தின் மீது பிரதமர் மோடியின் கவனம் திரும்பி யிருக்கிறது. மாநில அரசுகள் ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்தால் உடனே அதை இலவசம், ரவுடி கலாசாரம் என, எகத்தாளம் பேசும் மோடி, இப்போது தமிழகத்தில் உள்ள மகளிர் இலவச பஸ் பயண திட்டம் மீது தாக்குதல் தொடுத்துள்ளார். இந்த இலவச பயணத்தால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர், 50 சதவீதம் குறைந்து விட்டதாக கண்ணீர் வடித்திருக்கிறார்.இலவசம் வேணாம்... கட்டணத்தை கொஞ்சம் குறைத்தாலே மக்கள் மீண்டும் மெட்ரோ ரயிலுக்கு படையெடுப் பாங்களே!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சேலம் பெரியார் பல்கலை பொறுப்பு பதிவாளராக இருந்து பணி ஓய்வு பெற்ற தங்கவேலுவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பு, உயர் நீதிமன்ற கண்டனத்தை மீறி, தற்காலிக ஓய்வூதியம் வழங்கி பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார். பதிவாளர் பொறுப்பிலும், பேராசிரியர் பணியிலும் நீடிக்க தகுதியற்றவர் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அனைத்து நடைமுறைகளையும், விதிகளையும் மீறி ஓய்வூதியமும், ஓய்வு கால பலன்களும் வழங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.பா.ஜ.,வினர் ஆதரிக்கிற துணைவேந்தரின் முடிவை, அதே கூட்டணியில இருக்கிற டாக்டர் கண்டிப்பது, எங்கயோ இடிக்குதே!அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற, மதுரை மீனாட்சி அம்மனிடம் கதறி அழுததாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சங்குமணி தெரிவித்துள்ளார். அதே போல, அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற ஒருமுறை மீனாட்சி அம்மனிடமும், தமிழக முதல்வரிடமும் அழுது முறையிட்டால் நிச்சயம் கோரிக்கை நிறைவேறும்.மீனாட்சி அம்மன் கூட மனமிரங் கிடும்... இந்த ஆட்சியாளர்கள் மனம் இரங்காது, போங்க!