உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

கன்னியாகுமரி தொகுதி காங்., - எம்.பி., விஜய் வசந்த் அறிக்கை: காங்., மூத்த தலைவரும், தமிழ் இலக்கிய வாதியுமான என் பெரியப்பா குமரி அனந்தனுக்கு, தகைசால் விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி. கங்கையே வருக, குமரியை தொடுக என்ற கனவோடு வாழ்கிறார் குமரி அனந்தன். தமிழக அரசை தொட்டதற்கெல்லாம் விமர்சிக்கும் தமிழிசை, இதை மட்டும் விமர்சிக்க முடியாது... ஏன்னா, விருது வாங்குறது, அவங்க அப்பாவுக்காச்சே! பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி பேட்டி: தி.மு.க., கூட்டணி கட்சிகள், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் என்ற வார்த்தை இல்லாததால் பா.ஜ., பழிவாங்குகிறது என கூறுவது தேவையற்ற ஆணிகள். தமிழக பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்கள் பெயரும் கூறப்படுவது இல்லை. பட்ஜெட் விவகாரத் தில் தி.மு.க., மடைமாற்ற அரசியலையும், திசை திருப்பும் அரசியலையும் செய்து கொண்டிருக்கிறது.தமிழகத்தில், மாவட்டத்துக்கு ஒரு கட்சி ஆட்சி நடக்கவில்லை என்பதால், அதெல்லாம் சர்ச்சையாகாது என்பது இவங்களுக்கு தெரியாதா?ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: படித்து அறிவால் வெல்ல வேண்டிய மாணவ சமூகத்தை, திருச்சியில் அரிவாள் ஏந்தி ஆசிரியரை வெட்ட வைத்த சம்பவமும், கோவையில் படிக்க வேண்டிய மாணவர்கள் குடித்து சீரழியும் சம்பவமும், திராவிட மாடல் அரசின் பெரும் சாதனை. வன்முறைக்கு செல்லாமல், நன்முறைக்கு திரும்ப பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இந்த சீரழிவுக்கு அரசை மட்டுமே பொறுப்பாக்கி யாரும் தப்பிக்க முடியாது... பெற்றோரில் துவங்கி பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள்னு எல்லாருக்கும் பொறுப்பு வேண்டும்!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை, தொடர்ந்து கைது செய்து வந்த இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக, தற்போது மீன்பிடி படகுகள் மீது மோதி, தமிழக மீனவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் அத்து மீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக தொழிலில் ஈடுபடும் சூழலை, மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும்.அ.ம.மு.க.,வே ஆட்சிக்கு வந்தாலும் அப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி தரவே முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி