பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி: தி.மு.க.,வின் மூத்த தலைவர், மறைந்த அமைச்சரான கோ.சி.மணிக்கு, பா.ம.க., சார்பில், ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ஸ்டாலினால் ஒரு நினைவு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது அரசியலை கடந்து, அவருடைய முயற்சியால் எடுக்கப்படுகிறது. இது அரசியலுக்காக அல்ல. இந்த மணி மண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தால் மகிழ்ச்சி தான்.'டெல்டா பகுதியில் அசைக்க முடியாத தலைவரா இருந்த கோ.சி.மணிக்கு தி.மு.க., மணி மண்டபம் கட்டலை' என்பதை குத்தி காட்டுற மாதிரி இருக்கே!தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை: குறுவை சாகுபடிக்கு
குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கவில்லை. எனவே, சம்பா சாகுபடிக்கு தேவையான
விதை நெல், உரம், பூச்சிமருந்து போன்றவைகள் விவசாயிகளுக்கு போதிய அளவு
தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும்
டெல்டாகாரன் என பெருமையாக கூறும் முதல்வர்ஸ்டாலின் விவசாயிகள்நலன் கருதி,
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைகள் எல்லாம் நிரம்பி
வழிவதாலும், அடுத்து வடகிழக்கு பருவமழை சீசன் துவங்க இருப்பதாலும், வெள்ள
நிவாரணமும் சேர்த்து தரணும் போலிருக்கே! பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி: தி.மு.க.,வின் 131 எம்.எல்.ஏ.,க்களில், 23 பேர் வன்னியர். ஆனால், அவர்களுக்கு மூன்று அமைச்சர் பதவிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. ஆனால், இசை வேளாளர் சமூகத்தின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் அமைச்சரவையில் உள்ளனர். அதுபோல, 21 எம்.எல்.ஏ.,க்களை தந்த பட்டியல் இனத்தவர்களுக்கு, மூன்று அமைச்சர் பதவிகள் தான். அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் ஒதுக்கப்படவில்லை. இதுதான் தி.மு.க.,வின் சமூக நீதி.இது பற்றி, அந்த கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அல்லவா கவலைப்படணும்... பக்கத்து இலைக்கு இவர் ஏன் பாயசம் கேட்கிறாரு?தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நரசிம்மன் பேட்டி: மத்திய பட்ஜெட்டில்,தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. தமிழகத்திற்கானதிட்டங்கள் குறித்து, எம்.பி.,க்கள் லோக்சபாவில் பேசவில்லை. தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 எம்.பி.,க்களும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டில்லி சென்று, பிரதமரிடம் கோரிக் கை வைத்தால், திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. 'நீங்களா வந்து எங்களிடம் கெஞ்சி கேட்டால் தான், திட்டங்களை நிறைவேற்றுவோம்'னு சொல்றது, ஜனநாயக நாட்டுல ஏற்புடையதா?