உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர்செல்லமுத்து பேட்டி: டெல்டா
மாவட்டம் மட்டுமன்றி, தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சமீபத்தில், உத்திர மேரூர், மதுராந்தகம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் சில
பகுதிகளில், நெற்பயிர்கள் மழை நீரில்மூழ்கியதால், விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழக அரசு, வழக்கம்போல்
கணக்கெடுப்பு நடத்துவதும், ஆய்வு மேற்கொள்வதுமாக காலத்தை கடத்தாமல்,
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். மாவட்டம் முழுசா வெள்ளத்துல மிதந்தாலே நிவாரணம்
கிடைக்கிறதுக்குள்ள நாக்கு தள்ளிடும்... இதுல, இடையில பெய்யுற
மழைக்கெல்லாம் நிவாரணம் உடனே கிடைக்குமா?தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: இயற்கை பேரழிவு எங்கு நடந்தாலும்,முல்லை பெரியாறுஅணையுடன் ஒப்பிட்டு பேசுவதை, சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற விஷம பிரசாரம் கடும் கண்டனத்துக்குரியது. கேரளாவின் இந்த செயல், தமிழக விவசாயிகளை பெரும் கவலை அடைய வைத்துள்ளது. இந்நிலையிலும், தி.மு.க., காங்கிரஸ் வாய் திறக்காமல் இருப்பது, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாலு போய் கத்தி வந்ததுடும் டும் டும் என்ற கதையாக, காவிரி விவகாரம் அடங்குனாமுல்லை பெரியாறு விஸ்வரூபம் எடுக்குது... பாவம், திராவிட மாடல் ஆட்சியாளர்கள்!தமிழக பா.ஜ., மாநில செயலர் எஸ்.ஜி.சூர்யா பேச்சு: தி.மு.க., தேர்தல்அறிக்கையில் வேலுாரில் தொழிற் பூங்கா அமைக்கப்பட்டு, 50,000 கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்து, 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், 1 கோடி ரூபாயாவது முதலீடாக வந்துள்ளதா? இதற்கு நேரடியா பதில் சொல்லாம, பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை பட்டியலிட்டு, அதையெல்லாம் மத்திய அரசு செய்துவிட்டதான்னு தான் தி.மு.க.,வினர் கேட்பாங்க!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஹிண்டன்பர்க் விவ காரத்தை வைத்து இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்கலாம் என, சில அன்னிய சக்திகளுடன்கைகோர்த்துக் கொண்டு துள்ளி குதித்த, 'இண்டி' கூட்டணி உள்ளிட்ட சில இடதுசாரி தீய சக்திகளின் மலிவான அரசியல் சதி தவிடு பொடியாக்கப்பட்டது.அன்னிய சக்திகளை கூட சமாளிச்சிடலாம் போல... உள்நாட்டு சதிகாரர்களை சமாளிக்கிறது தான் மத்திய அரசுக்கு சவாலே!