உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு...பேட்டி...அறிக்கை...

பேச்சு...பேட்டி...அறிக்கை...

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு :மாவட்டத்திற்கு 100 படித்த இளைஞர் களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு அரசியல் கல்வியைப் பயிற்றுவியுங்கள். அப்போது தான், தமிழ் ஜாதி ஆள வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் வளரும்.இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா அறிக்கை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை, பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாறாக மத்திய அரசுக்கு நேர்ந்துள்ள நெருக்கடியைக் காட்டுகிறது. இந்தப் பிரச்னையில், பிரணாப் கைகழுவிட்டார். எனவே, பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: அ.தி.மு.க., எங்களை கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. அதன் பிறகும், பேச்சுவார்த்தைக்கு போனோம். கடந்த, 2006ல் நாங்கள் வெற்றி பெற்ற இடங்களைக் கூட அவர்கள் கொடுக்க விரும்பவில்லை. பேச்சுவார்த்தை தொடரும் போதே அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். அவர்களுக்கு எங்களுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதில் விருப்பம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்ததால் வெளியேறிவிட்டோம்.மத்திய அமைச்சர் நாராயணசாமி பேட்டி: நிலக்கரி, தண்ணீர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இப்போதைய மின் தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யாது. எனவே, நாட்டிற்கு அணு ஆற்றல் மின்சாரம் தேவையானது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறியுள்ளார்.அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நிருபமா ராவ் பேட்டி: பயங்கரவாதம் குறித்தும், அதற்கு யாரெல்லாம் ஆதரவாக உள்ளனர் என்பது தொடர்பாகவும் பல கருத்துக்களை இந்தியா பதிவு செய்துள்ளது. இதையெல்லாம் முதலில் கண்டு கொள்ளாமல், இருந்த உலக நாடுகள் இப்போது நம்பத் துவங்கியுள்ளன. இதனால், பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.காங்கிரஸ் எம்.பி., அழகிரி பேச்சு: தமிழர்களென கூப்பாடு போடும் அரசியல்வாதிகள், தமிழர்கள் நலனிற்கு உதவி செய்யவில்லை. தமிழ்த் தலைவர்கள் கொலை செய்யப்பட்டபோது, வைகோ போன்றவர்கள் குரல் எழுப்பவில்லை, இந்த மூன்று பேருக்கு மட்டும் வக்காலத்து வாங்கும் இவர்கள், தமிழர்கள் அல்ல, கைக்கூலிகள் என்று தான் சொல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை