| ADDED : ஜூன் 04, 2024 04:58 AM
குப்பையால் துர்நாற்றம்தேங்காய்த்திட்டு, பால் நிலையம் வீதி, 3வது குறுக்கு தெருவில் குப்பைகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.நடராஜன், தேங்காய்த்திட்டு.சாலை அகலம் குறைவுவிழுப்புரம் நான்குவழிச்சாலையில் பங்கூர்பஸ் நிறுத்தம் அருகே சர்வீஸ் சாலையின் அகலம் குறைவாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.ஸ்டாலின், பங்கூர்.ரிப்லெக்டர்கள் தேவைபுதுச்சேரி எம்.என்.குப்பம் வரை அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் ரிப்லெக்டர்கள் இல்லாததால், வாகனங்கள் உரசி விபத்தில் சிக்கி கொள்கிறது.ராஜேஷ், ரெட்டியார்பாளையம்.விலை பட்டியல் வைப்பதில்லைபுதுச்சேரியில் உள்ள சிறிய மற்றும் நடுத்தரஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை பட்டியல் வைப்பது இல்லை.சிவதாசன், புதுச்சேரி.சரக்கு வாகனத்தால் டிராபிக் ஜாம்புதுச்சேரி கொசக்கடை வீதி, நீடராஜப்பையர்,ரங்கப்பிள்ளை வீதிகளில் பகல் நேரத்தில்கனரக வாகனங்கள் சரக்குகள் இறக்குவதால், கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.ராஜ்குமார், புதுச்சேரி.