உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / முந்திரியில எல்லா பொருளுமே காசு தான்!

முந்திரியில எல்லா பொருளுமே காசு தான்!

முந்திரி மதிப்பு கூட்டல் தொழிலில், நிறைவான லாபம் பார்த்து வரும், கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நடுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயப்ரியா வேல்முருகன்:கடலுார் தான் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். திருமணமானதும் சென்னையில் குடியேறினோம். புரொபசராக 10 ஆண்டுகள் வேலை செய்தேன். சென்னையில், பல இடங்களில் தரம் குறைவான முந்திரி அதிக விலைக்கு விற்கப்பட்டது என்னை யோசிக்க வைத்தது. கட்டுப்படியான விலையில், மக்களுக்கு முந்திரியை விற்பனை செய்யலாம் என்று, பகுதி நேரமாக சுயதொழிலை துவங்கினேன். பண்ருட்டியில் முந்திரி கொள்முதல் செய்து, சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு விற்பனை செய்தேன்.அதில் நிறைய விஷயங்களை ஆர்வமாக கற்று, தனியாக பேக்டரி நடத்த நினைத்து, 2021ல் வேலையை விட்டேன்.பேக்டரிக்கான கட்டடம் மற்றும் இயந்திரங்களுக்கு, 70 லட்சம் ரூபாய் செலவானது. தவிர, உற்பத்தி மூலதனத்துக்கு மட்டும் வங்கியில், 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்.உலக அளவில் முதல் தரமான முந்திரி, 'W180' என குறிப்பிடப்படுகிறது; இது, 454 கிராம் எடையுள்ள பாக்கெட்டில், 180 முந்திரி பருப்புகளை கொண்டிருக்கும்.'முந்திரியின் அரசன்' எனப்படுகிற இந்த, W180 ரக முந்திரி, சேதாரமின்றி பருப்பு பெரியதாகவும், கூடுதல் சுவையுடன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. ஏற்றுமதிக்கு செல்லும் இந்த வகை முந்திரி, நகர பகுதிகளிலும் அதிகம் விற்பனையாகிறது.இதற்கு அடுத்தபடியாக, 'W210, W240, W320, W400, W450' உட்பட சராசரியாக, 15 விதமான தரத்தில் விற்பனையாகின்றன. இந்த குறியீடானது, 454 கிராம் எடைக்கு எத்தனை முந்திரிகள் இருக்கின்றன என்பதற்கான கணக்கீடு. இதில், 'W' என்பதற்கு, 'வெள்ளை நிற முழு முந்திரி' என அர்த்தம்.தமிழகத்தில் அதிகமாக கடைப்பிடிக்கப்படுகிற, 10 வகை கிரேடிங் புராசசை தான் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். முந்திரி மதிப்பு கூட்டல் முறையிலும், குறிப்பிட்ட அளவு சேதாரம் இருக்கும்.அப்படி உடைஞ்ச முந்திரி, குருணை மாதிரியான முந்திரினு எல்லாத்தையும் தனித்தனி விலைக்கு வித்துடலாம். முந்திரியின் ஓடுகளில் எண்ணெய் தன்மை இருக்கிறதால, பெயின்ட் தயாரிப்புக்கு பயன்படும்.அதனால், இந்த ஓடுகளை தனியாக வித்துடுவோம். எண்ணெய் பிரித்து எடுக்கப்பட்ட ஓடுகள், பாய்லர் தேவைக்கு எரிபொருளாக பயன்படும். வாழை மாதிரியே, முந்திரியிலயும் எல்லா பொருளுமே காசு தான். மொத்த விலை மற்றும் சில்லறை விலையில் இந்தியா முழுக்க முந்திரியை விற்பனை செய்வதுடன், ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி