உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / உள்ளடி வேலை செய்தவர்களுக்கு காத்திருக்கும் கல்தா!

உள்ளடி வேலை செய்தவர்களுக்கு காத்திருக்கும் கல்தா!

''மகனுக்கு போட்டியா இருக்கறவரை, 'அவாய்ட்' பண்ணிட்டார் ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ws11rd03&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0''முதல்வர் ஸ்டாலினை, சமீபத்துல அவரது வீட்டுல அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் எல்லாம் பார்த்து, லோக்சபா தேர்தல் பணிகளை எப்படி செய்தோம்னு விளக்கியிருக்கா ஓய்...''இதுல, விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணனை மட்டும் அழைச்சிட்டு போகல... சமீபத்துல மறைந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., புகழேந்தி வகித்து வந்த விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலர் பதவியை லட்சுமணன் எதிர்பார்க்கறார் ஓய்...''இந்த பதவிக்கு கவுதம சிகாமணியும் குறி வச்சிருக்கார்... 'தன் மகனுக்கு போட்டியா இருக்கற லட்சுமணன், முதல்வர் பார்வையில பட வேண்டாம்னு தான், அவரை சென்னைக்கு பொன்முடி அழைச்சுட்டு போகல'ன்னு, அந்த மாவட்ட கட்சியினர் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சமூக விரோத செயல்களை கண்டுக்க மாட்டேங்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''திருச்சி மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவுல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... சமீப காலமா, மாவட்டத்துல, போலீசார் அத்துமீறல், லஞ்சம் வாங்குறது சம்பந்தமான செய்திகள் நிறைய வருதுங்க... ''சமீபத்துல நடந்த தனிப்பிரிவு போலீசாருக்கான மீட்டிங்குல, 'குற்ற செயல்களை அப்புறமா பார்த்துக்கலாம்... நிருபர்களுக்கு நியூஸ் தர்றது யாருன்னு கண்டுபிடியுங்க'ன்னு பெண் அதிகாரி கண்டிப்பான உத்தரவு போட்டிருக்காங்க...''மது, கஞ்சா விற்பனை, விபசாரம், மணல் கடத்தல் மாதிரி சட்டவிரோத செயல்கள் மாவட்டத்துல ஏராளமா நடக்குதுங்க... இதுல இருந்து பெண் அதிகாரிக்கு மாதம் லட்சக்கணக்குல மாமூல் கொட்டுதுங்க...''அதனால தான், 'சமூக விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுங்கன்னு சொல்லாம, அது சம்பந்தமா நியூஸ் குடுக்கிறவங்க மேல அதிகாரி கோபப்படுறாங்க'ன்னு நேர்மையான தனிப்பிரிவு போலீசார் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.மொபைல் போனை எடுத்து பார்த்த பெரிய சாமி அண்ணாச்சி, ''லதா மேடம் மெசேஜ் அனுப்பியிருக்காங்க...'' என முணுமுணுத்தபடியே, ''தேர்தல் முடிவு வந்ததும், பலரது பதவிகள் பறிபோகும்னு சொல்லுதாவ வே...'' என்றார்.''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''கோவையில தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,ன்னு மூணு கட்சிகளிலுமே, சொந்த கட்சி வேட்பாளருக்கு பலரும், 'உள்ளடி' வேலைகள் செஞ்சிருக்காவ... இது பத்தி மூணு கட்சி வேட்பாளர்களுமே, தங்களது தலைமைக்கு புகார் அனுப்பியிருக்காவ வே...''இதனால, தேர்தல் முடிவு வந்ததும், எந்தெந்த ஏரியாவுல ஓட்டுகள் குறைஞ்சிருக்குன்னு பார்த்துட்டு, அந்த ஏரியா கட்சி புள்ளிகள் மேல நடவடிக்கை எடுக்க இருக்காவ... அதே மாதிரி, தலைமை தந்த பணத்தையும், கோவையில வசூல் செய்த பணத்தையும் முறையா செலவழிக்கலைன்னும் புகார்ல சொல்லியிருக்காவ வே... ''குறிப்பா, ஆளுங்கட்சியில மாவட்ட, பகுதி நிர்வாகிகள் சிலரை பத்தி, தேர்தல் பொறுப்பாளரா வந்தவங்களும் தலைமையிடம் புகார்களை அடுக்கியிருக்காவ... எல்லாத்தையும் கூட்டி கழிச்சு, ஓட்டு எண்ணியதும் பதவி பறிப்பு இருக்கும்னு சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
மே 07, 2024 10:50

முதல்வர் கைய்யில் போலீஸு இலாக்கா அது தான் இந்த லட்சணம்


M Ramachandran
மே 07, 2024 10:49

தலை எப்படி அப்படியெ வாலும் ஆடுது


D.Ambujavalli
மே 07, 2024 06:57

நிர்வாகிகள், ஏஜெண்டுகளுக்கு தேர்தல் தானே தீபாவளி பொங்கல் ? லம்பாக்க கிடைக்கும் பணத்தை அப்படியே வாரிவிட அவர்கள் விவரம் இல்லாதவர்களா ? ரிசல்ட் வந்ததும், தலைவர்கள் வீடு வீடாகப் போய் ‘உங்களுக்கு பணம் கிடைத்ததா, எவ்வளவு கொடுத்தார்’ என்று கேட்டுக்கொண்டா அடித்தவரை அடித்தவரை லாபம் thaane


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ