உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தனியார் நிறுவனமாக மாறும் சி.எம்.டி.ஏ.,

தனியார் நிறுவனமாக மாறும் சி.எம்.டி.ஏ.,

''இடமாற்றத்துல, தப்பிச்சுட்டா ஓய்...'' என்றபடியே, பட்டர் பிஸ்கட்டை கடித்தார், குப்பண்ணா.''எந்த துறை அதிகாரிகளை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''லோக்சபா தேர்தலை முன்னிட்டு, போலீஸ் டிபார்ட்மென்ட்ல, ரெண்டு, மூணு வருஷத்துக்கு மேல இருக்கறவாளை இடமாறுதல் பண்ணிண்டு இருக்காளோல்லியோ...''இதுல, திருப்பூர் சிட்டி போலீஸ்லயும் சமீபத்துல சில இடமாறுதல் போட்டா... ஆனா, சில ஏ.சி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் ரெண்டு வருஷத்துக்கு மேல இங்க இருந்தும், இடமாறுதல்ல சிக்காம, 'எஸ்கேப்' ஆகிட்டா ஓய்...''அதுலயும் சிலர், பதவி உயர்வு பட்டியலில் முன்னிலையில் இருந்தும் கூட, 'எங்களுக்கு பதவி உயர்வு வேண்டாம்'னு சொல்ற மூடுல இருக்காளாம்... 'வளமான' திருப்பூரை விட்டு போக மனம் இல்லாதது தான் இதுக்கு காரணம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''கடலுார் தொகுதியில, தாமரை மலரணும்னு விருப்பம் தெரிவிச்சிருக்காங்க...'' என்ற, அந்தோணி சாமியே தொடர்ந்தார்...''பா.ஜ.,வுடன், பா.ம.க.,வினர் ரகசியமா கூட்டணி பேச்சு நடத்துறாங்க... இதுல, கடலுார் தொகுதியை கேட்டு வாங்குறதுல, ராமதாஸ் குறியா இருக்காருங்க...''ஆனா, இந்த மாவட்டச் செயலரா இருந்த ஏழுமலை உள்ளிட்ட பா.ம.க., முக்கிய நிர்வாகிகள், கடந்த சட்டசபை தேர்தல் முடிஞ்சதும், பா.ஜ.,வுல ஐக்கியமாகிட்டாங்க... இந்த தொகுதியில இருக்கிற வன்னியர் சமுதாய ஓட்டுகள் இப்ப பா.ஜ., ஓட்டு வங்கியா மாறியிருக்காம்...''அதனால, 'கடலுாரை பா.ம.க., வுக்கு விட்டு கொடுக்காம, நாமளே போட்டியிடணும்... அதையும் மீறி, பா.ம.க.,வுக்கு தாரை வார்த்தா, நாங்க தேர்தல் பணி செய்ய மாட்டோம்'னு பா.ஜ.,வினர் போர்க்கொடி துாக்கியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''போற போக்கை பார்த்தா, தனியார் ஆபீசா ஆகிடுமோன்னு பயப்படுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.''எந்த துறை விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும், சி.எம்.டி.ஏ.,வுல, பணியாளர் நிர்வாகம் படுமோசமாயிட்டே போவுது...''கடந்த வருஷம் அறிவிக்கப்பட்ட புதிய பணி விதிகள், இன்னும் ரகசியமாவே இருக்காம்... இதன் அடிப்படையில், பணியிடங்களை நிரவல் செய்யும் நடவடிக்கையும் கிடப்புல கிடக்கு வே...''நகரமைப்பு வல்லு னர்கள் உள்ளிட்ட நிரந்தர பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புறதுலயே மேலதிகாரிகள் குறியா இருக்காவ... முறையான பதவி உயர்வுகளை தடுப்பது, காரணம் இல்லாம, 'சஸ்பெண்ட்' பண்றதுன்னு, 'டார்ச்சர்' அதிகமாயிட்டு வே...''அதே நேரத்துல, ஒப்பந்த முறையில் பல்வேறு பிரிவுகள்லயும் பணியாளர்கள் நியமிக்கப்படுதாவ... இவங்களுக்கு உயர் அதிகாரிகள் அதிகப்படியான முக்கியத்துவம் தர்றாவ வே...''இதனால, 'இப்படியே போயிட்டு இருந்தா, அரசு நிறுவனமான, சி.எம்.டி.ஏ., சீக்கிரமே தனியார் கார்ப்பரேட் நிறுவனமா மாறிடும்'னு, நேர்மையான அதிகாரிகளும், ஊழியர்களும் புலம்பிட்டு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.நாயர் தந்த டீயை பருகி முடித்ததும், பெரியவர்கள் இடத்தை காலி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Babu Bhopal
பிப் 16, 2024 16:49

Online Petition - Take action on CMDA officers / officials for Mandatory Bribe for Building Plan Approval s://chng.it/G89nK8YdPd


D.Ambujavalli
பிப் 16, 2024 06:20

கட்சி ஆரம்பித்து நாற்பது ஆண்டுக்கு மேலாகியும், தனித்து நிற்க தெம்பில்லாமல் ஒரு சீட்டுக்கு, ரா. ச. பதவிக்கு என்று ஒட்டுப்பிடிக்கும் இவர்கள் கிடைத்த வரை அடிப்பதை தவிர எதற்கு கட்சி நடத்துகிறார்கள்?


மேலும் செய்திகள்



புதிய வீடியோ