உள்ளூர் செய்திகள்

பாசி பருப்பு கஞ்சி!

தேவையான பொருட்கள்:அரிசி - 100 கிராம்பாசி பருப்பு - 50 கிராம்பூண்டு - 10 பல்தண்ணீர், சீரகம், மிளகுத்துாள், உப்பு - தேவையான அளவு.செய்முறை:அரிசியை சுத்தம் செய்து, கொரகொரப்பாக பொடிக்கவும். அதில், பாசி பருப்பு, சீரகம், தோல் நீக்கிய பூண்டு, தேவையான தண்ணீர் ஊற்றி, கஞ்சி பதத்தில் வேக வைத்து இறக்கவும். இதில் உப்பு, மிளகுத் துாள் சேர்த்தால், 'பாசிப் பருப்பு கஞ்சி' தயார். சுவை மிக்கது. எளிதில் ஜீரணமாகும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.- கே.முத்துாஸ், தொண்டி.தொடர்புக்கு: 98658 84768


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !